Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்பின் மட்டுமல்ல.. ஸ்விங் பிட்சிலும் பட்டாசாய் வெடிப்பேன்.. நியூசிலாந்து மண்ணில் நிரூபித்த படிக்கல்!

ஓவல்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணிக்காக ஆடிய தேவ்தத் படிக்கல் 89 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய சூழலில், படிக்கல் - சாய் சுதர்சன் கூட்டணி அசத்தலாக விளையாடி இந்திய அணியை காப்பாற்றி இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடுத்த மாதம் விளையாடுகிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய ஏ அணி வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

Devdutt Padikkal

தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து ஏ அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் அன்சுல் கம்போஜ் மற்றும் ஆகிப் நபி தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 2வது இன்னிங்ஸை இந்திய அணியின் ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி தொடங்கியது.

அதில் ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கேஎல் ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் படிக்கல் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்தது. இருவருமே ஸ்விங் பந்துகளை எந்தவித பதற்றமும் இல்லாமல் எதிர்கொண்டனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது.

படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் இருவருமே பவுண்டரிகள் தான் டீல் செய்தனர். சிறப்பாக ஆடிய படிக்கல் அரைசதம் கடக்க, சாய் சுதர்சன் நங்கூரமிட்டு நின்றார். 2வது நாள் முடிவில் இந்திய ஏ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 98 ரன்கள் பின் தங்கி இருக்கும் சுழலில், நாளைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிறப்பாக ஆடிய படிக்கல் 56 ரன்களிலும், சாய் சுதர்சன் 39 ரன்களும் எடுத்து களத்தில் இருக்கின்றனர். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஸ்பின் பவுலிங்கில் படிக்கல் சிறப்பாக ஆடி இரு சதங்களை விளாசி தள்ளினார். தற்போது நியூசிலாந்து மண்ணில் ஸ்விங் பிட்சிலும் ரன்கள் சேர்த்து திறமையை நிரூபித்துள்ளார். இதனால் படிக்கல் பீக் ஃபார்மில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Sunday, October 25, 2026, 13:29 [IST]
Other articles published on Oct 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+