முதல் இன்னிங்ஸிலேயே ஆதிக்கம்.. இரட்டை சதத்தால் மிரட்டிய டேவன் கான்வே.. இங்கிலாந்துக்கு அச்சுறுத்தல்!
லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் டேவன் கான்வாய் காட்டிய அதிரடியால் நியூசிலாந்து அணி வலுவான ஸ்கோரை அடித்துள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
நியூசிலாந்து அணியின் இந்த போட்டியை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகாக இந்திய அணி உற்று நோக்கி வருகிறது.

தொடக்கமே சறுக்கல்
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்கம் சற்று சரிவாக இருந்தது. டாப் ஆர்டரில் இருக்கும் அனுபவ வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். டாம் லாத்தம் 23 ரன்களுக்கும், கேன் வில்லியம்சன் 13 ரன்களுக்கும், ராஸ் டெய்லர் 14 ரன்களுக்கும் வெளியேறினர்.

இளம் வீரர்
ஆனால் மறுமுனையில் ஆடி வந்த இளம் வீரர் டேவன் கான்வே யாரும் எதிர்பார்க்காத வகையில் அசத்தலாக விளையாடினார். கான்வாய்க்கு இது தான் முதல் சர்வதேச போட்டியாகும். இந்நிலையில் அறிமுகமான முதல் போட்டியிலேயே இரட்டை சதம் விளாசியுள்ளார்.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்
மறுமுனையில் இவருக்கு ஹென்றி நிகோலஸ் மட்டுமே நல்ல பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கு ரன்களுக்கு வெளியேறினர். இதனால் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக விளையாடிய ஹென்றி 61 ரன்களை குவித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இளம் வீரர் டேவன் கான்வே 200 ரன்களை எடுத்தார். இதில் 22 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும்.

உற்றுநோக்கும் இந்திய அணி
இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகும் விதத்தில் தான் நியூசிலாந்து அணி, இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக அறிமுக வீரர் டேவன் கான்வே இரட்டை சதமடித்து அசத்தியது. இந்திய அணிக்கு அச்சுறுத்தலை கிளப்பியுள்ளது. இங்கிலாந்து போன்ற கடினமான பிட்ச்-ல் அறிமுக போட்டியில் இப்படிபட்ட ஆட்டத்தை டேவன் கான்வேவை சமாளிப்பது இந்தியாவுக்கு கடினமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications