Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி சாதனையை முறியடித்த ஏலியன்.. 3 போட்டியில் 14 சிக்சர்களை பறக்கவிட்ட பிரெவிஸ்.. இனிதான் ஆரம்பம்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை டிவால்ட் பிரெவிஸ் பெற்றுள்ளார். இதுவரை 12 சிக்சர்களை விளாசிய விராட் கோலி முதலிடத்தில் இருந்த நிலையில், 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசியதன் மூலமாக பிரெவிஸ் புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில், கடைசி ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதல் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை குவித்தது.

Dewald Brevis Breaks Virat Kohli s Record

அதிரடியாக ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 26 பந்துகளில் 6 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 53 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் சீனியர் வீரரான கிளென் மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 8 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 62 ரன்களை விளாசினார்.

இதன் மூலமாக ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தாலும், டிவால்ட் பிரெவிஸ் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் வெறும் பந்தை மற்றும் பார்த்து பிரெவிஸ் அடிக்கும் நோ-லுக் சிக்சர்களை மிரட்டலாக அமைந்தது.

இந்த போட்டியில் மட்டுமே 6 சிக்சர்களை விளாசியதன் மூலமாக விராட் கோலியின் முக்கியமான சாதனை ஒன்றை டிவால்ட் பிரெவிஸ் முறியடித்துள்ளார். அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை டிவால்ட் பிரெவிஸ் பெற்றுள்ளார். இதுவரை விராட் கோலி 10 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி, 12 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை டிவால்ட் பிரெவிஸ் வெறும் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசி முறியடித்துள்ளார். இந்த டி20 தொடரில் மட்டும் 3 போட்டிகளில் ஆடியுள்ள டிவால்ட் பிரெவிஸ், 14 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 180 ரன்களை விளாசி இருக்கிறார். 22 வயதாகும் டிவால்ட் பிரெவிஸ், தனது முழு திறமையையும் இந்த தொடரில் வெளிப்படுத்தி இருப்பதால், தென்னாப்பிரிக்கா அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக விரைவில் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, August 16, 2025, 22:58 [IST]
Other articles published on Aug 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+