For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

57 பந்தில் 162 ரன்கள் விளாசிய பிராவிஸ்.. பேபி டேவில்லியர்ஸ் புதிய சாதனை.. மும்பை அணிக்கு செம லக்

போட்செஃப்ஸ்டுரூம்: தென்னாப்பிரிக்கா டி20 சேலஞ் கிரிக்கெட் தொடரில் 57 பந்தில் 162 ரன்கள் விளாசி டிவால்ட் பிராவிஸ் சாதனை படைத்தார்.

டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய பிராவிஸ், நைட்ஸ் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தார்.

அண்டர் 19 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்காக களமிறங்கிய பிரவீஸ், டிவில்லியர்ஸ் போல் பேட்டிங் செய்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.

பிராவீஸ் சாதனை

பிராவீஸ் சாதனை

அண்டர் 19 உலககோப்பையில் அதிகபட்சமாக 506 ரன்கள் விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் மும்பை அணி பிரவீஸை ஏலத்தில் எடுத்தது.. ஆனால், ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த வெற்றியை பிராவீஸ் பெற முடியவில்லை,. மேலும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் பிராவீஸ் சேர்க்கப்படவில்லை.

அதிவேக 150 ரன்கள்

அதிவேக 150 ரன்கள்

இந்நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நடத்தும் டி20 தொடரில் பிராவீஸ் அதிரடியாக விளையாடி அசத்துகிறார். நேந்றைய ஆட்டத்தில் 35 பந்துகளை எதிர்கொண்ட பிராவீஸ் சதம் விளாசினார். இதனைத் தொடர்ந்து அதிரடியை காட்டிய பிராவீஸ், சிக்சர்களை பறக்கவிட்டார். இதன் மூலம் 52 பந்தில் பிராவீஸ், 150 ரன்களை விளாசினார்.

புதிய சாதனை

புதிய சாதனை

இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் 150 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை பிரவீஸ் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு 53 பந்தில் கெயில் 150 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. மேலும் குறைந்த வயதில் 150 ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் பிராவிஸ் படைத்தார்.

ஒரே மேட்சில் 501 ரன்கள்

ஒரே மேட்சில் 501 ரன்கள்

57 பந்தில் 162 ரன்கள் எடுத்து பிரவீஸ் ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகளும், 13 இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நைட்ஸ் அணி 230 ரன்கள் வரை எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஒரே மேட்சில் இரு அணிகளும் சேர்ந்து 501 ரன்கள் எடுத்தது.

Story first published: Tuesday, November 1, 2022, 16:41 [IST]
Other articles published on Nov 1, 2022
English summary
Dewald Brevis hits 57 balls 162 runs creates world record in t20 cricket57 பந்தில் 162 ரன்கள் விளாசிய பிராவிஸ்.. பேபி டேவில்லியர்ஸ் புதிய சாதனை.. மும்பை அணிக்கு செம லக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+