திருமணமான 2வது மாதம்.. சாஹல் என்னை ஏமாற்றி மாட்டிக் கொண்டார்.. போட்டு உடைத்த முன்னாள் மனைவி!
மும்பை: நட்சத்திர கிரிக்கெட் வீரர் சாஹல் உடனான உறவு நிலைக்காது என்பதை திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே உணர்ந்து கொண்டதாக அவரின் முன்னாள் மனைவி தனாஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார். திருமணமான 2வது மாதத்திலேயே சாஹல் தன்னை ஏமாற்றி மாட்டிக் கொண்டதாக கூறியுள்ள அவர், திருமண உறவை காப்பாற்ற கடுமையாக முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நட்சத்திர பவுலராக வலம் வருகிறார் சாஹல். 2024 டி20 உலகக்கோப்பைக்கு பின் சாஹல் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய பவுலராக இருந்து வருகிறார். அதிலும் கடந்த ஐபிஎல் தொடரில் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணியால் சாஹல் வாங்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஸ்பின்னரும் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்டதே இல்லை. இதன் மூலமாக சாஹலின் செயல்பாடுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்து கொள்ள முடியும். இதனிடையே சாஹல் மற்றும் அவரது மனைவி தனாஸ்ரீ வர்மா இருவரும் மும்பை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இதன்பின் சாஹல் அவரின் கிரிக்கெட் மற்றும் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் தனாஸ்ரீ வர்மா மாடலிங் மற்றும் சினிமாத் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் கூட நடித்திருக்கிறார். தற்போது தனாஸ்ரீ வர்மா பல்வேறு நேர்காணல்களிலும் பங்கேற்று சாஹல் உடனான உறவு குறித்து பேசி வருகிறார்.
அதில் தனாஸ்ரீ வர்மா பேசுகையில், சாஹல் உடன் திருமணம் முடிந்து ஓராண்டிற்குள்ளாகவே இந்த உறவு நீடிக்காது. நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்ந்துவிட்டேன். சாஹல் என்னை ஏமாற்றுகிறார் என்பதை 2வது மாதத்திலேயே கண்டுபிடித்தேன். ஆனால் ஒரு திருணம உறவு நீடிக்க வேண்டுமென்றால், அதற்காக நாமும் கொஞ்சம் உழைப்பை கொடுக்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அதனால் ஒவ்வொரு விஷயத்தின் போதும் சாஹலுக்காக நின்றேன். அதனை அனைவரும் பார்த்தனர். சிறிய விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும், அவருக்காக நின்றிருக்கிறேன். அதனால் தான் சாஹல் உடனான உறவு முடிவுக்கு வந்த பின், உணர்வுப்பூர்வமாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications