Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தில் இந்தியா - பாக் மேட்ச்... கிரிக்கெட் கடவுளை தரிசித்த தனுஷ்

பர்மிங்காம்: இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்ஹாமில் நடக்கும் 'பி' பிரிவு நான்காவது லீக் போட்டியில், இந்தியா அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்த போட்டியை காணச் சென்ற தனுஷ் கிரிக்கெட் கடவுள் சச்சினை சந்தித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரிக்கும். துறவியாக போன நபர் கூட ஆசையை விட முடியாமல் மேட்ச் பார்க்க ஓடுவதாக விளம்பரங்கள் போடுகின்றனர்.

Dhanush meets the god of cricket sachin

கடந்த 2015க்கு பின் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் மோதுவதால், இங்கிலாந்தை நோக்கி, கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் என இந்தியாவில் இருந்து ஒரு பட்டாளமே சென்றனர்.

இங்கிலாந்து நாட்டின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காண சச்சின் தெண்டுல்கரும் பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் போட்டியை தமிழ் வர்ணனையுடன் ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.
இடை இடையே மழை குறிக்கிட்டு போட்டிக்கு தடை செய்தது.

நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் கிரிக்கெட் போட்டியை காண பர்மிங்ஹாம் பறந்துள்ளனர். இதில் மழை கேப்பில் தனுஷ், சச்சினுடன் போட்டோ எடுத்துள்ளார்.

இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், கிரிக்கெட் உலகின் ஒரே கடவுள் சச்சினை தரிசித்தேன் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Story first published: Sunday, June 4, 2017, 21:52 [IST]
Other articles published on Jun 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+