Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கையில் காயம்…!! களத்தில் சதம்…!! சச்சின் சாதனையுடன் இணைந்து கலக்கிய தவான்.. !!

Recommended Video

சச்சின், கங்குலி சாதனையுடன் இணைந்து கலக்கிய தவான்.. !!

லண்டன்:ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் கையில் காயத்துடன் களத்தில் சதமடித்த தவான், உலக கோப்பை வரலாற்றில் 3 சதங்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் சச்சின், கங்குலியுடன் இணைந்துள்ளார்.

அவ்வளவு எளிதாக யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்... இந்திய அணியின் ரன்குவிப்பு இப்படி இருக்கும் என்று. அப்பப்பா... பேட்டிங்கில் திணறடித்து, ஆஸி.யின் பந்துவீச்சை இந்திய அணி அடித்து துவைத்திருக்கிறது.

உலக கோப்பை வரலாற்றில் ஆஸி.க்கு எதிரான அதிகளவு ரன் குவித்திருப்பது இம்முறை தான். சவாலான இலக்கை நிர்ணயித்த இந்தியா... பல சாதனைகளையும் செய்து இந்த போட்டியில் அசத்தி இருக்கிறது.

அருமையான அடித்தளம்

அருமையான அடித்தளம்

முதலில் களம் கண்ட இந்திய அணியின் தொடக்க வீரர்களின் அருமையான பிளாட்பார்ம் ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. கூல் நைடர் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து தமது கலக்கினார். அப்படியே... அந்த அதிரடி ஆட்டத்தை அரை சதம் வரை கொண்டு அசத்தினார் தவான்.

தொடங்கி வைத்த தவான்

தொடங்கி வைத்த தவான்

இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்களை தான் எடுத்து இருந்தது. அதன்பிறகு...எக்ஸ்பிரஸ் வேகம் தான். முதலில் தொடங்கி வைத்தவர் தவான். முடிவில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை குவித்தது.

தவான் 6வது சதம்

தவான் 6வது சதம்

அதிகபட்சமாக துவக்க வீரர் தவான் 117 ரன்களும், கோலி 82 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தவான் 109 பந்துகளில் 117 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஐசிசி தொடர்களில் தனது 6வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

சச்சினுடன் இணைந்த தவான்

சச்சினுடன் இணைந்த தவான்

இதற்கு முன்னதாக 2015ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 சதங்களை அடித்திருந்தார். இந்த சதத்துடன் சேர்த்து 3 சதங்கள். இதையடுத்து, இந்தியா சார்பாக உலகக் கோப்பையில் 3 அல்லது அதற்கு மேலான சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், கங்குலியுடன் தவான் இணைந்துள்ளார்.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

Story first published: Sunday, June 9, 2019, 22:22 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+