Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியுடன் நட்பை முறித்துக் கொண்ட தவான்.. ஒரு ரன் அவுட்டுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா?

Recommended Video

India Vs South Africa 1st ODI- இந்தியா அபார வெற்றி..எப்படி தெரியுமா?- வீடியோ

டர்பன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வென்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா 270 ரன்கள் இலக்கை மிக எளிதாக அடைந்தது. 45.3 ஓவர் முடிவில் 4 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா வென்றது.

இதனால் இந்தியா தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதில் கோஹ்லியால் தவான் ரன் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிரடி

அதிரடி

இந்த போட்டியில் தவான் மீண்டும் பார்மிற்கு திரும்பினார். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். 29 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம்.

அவுட்

அவுட்

ஆனால் நன்றாக ஆடிய தவான் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். கோஹ்லி அழைத்தவுடன் தேவையில்லாமல் ஓடி அவுட் ஆனார். இதனால் அவர் கோஹ்லியிடம் களத்திலேயே கோபப்பட்டார்.

மிகவும் கோபம்

மிகவும் கோபம்

களத்தில் அவர் கோஹ்லியிடம் கத்திய வீடியோ வெளியானது. அதே சமயம் அவர் பெவிலியனிலும் கோபமாக இருந்தார். இந்திய வீரர்களிடம் கோபமாக பேசிக்கொண்டு இருந்தது வீடியோவாக வெளியானது.

முறிவு

இந்த விஷயம் வைரல் ஆனது. ஜடேஜா பெயரில் இயங்கி வரும் இந்த பேக் ஐடி ''கோஹ்லி எப்போது பெவிலியன் திரும்புவார் என்று தவான் காத்து இருக்கிறார்'' என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.

இனி இல்லை

இவர் ''எனக்கும் கோஹ்லிக்கும் இடையில் இருந்த நட்பு முறிந்துவிட்டது. இனி ரோஹித் தான் என் நண்பன்'' என இருவரும் இருக்கும் போட்டோவை வெளியிட்டு காமெடி செய்துள்ளார்.

சமாதானம்

ஆனால் தவான் கடைசி நேரத்தில் சமாதானம் ஆகிவிட்டார். இந்தியா வெற்றிபெற்ற போதும், கோஹ்லி செஞ்சுரி அடித்த போதும் தவான் கைதட்டினார். கடைசியில் தவான் கூல் ஆகிவிட்டார் என்று இவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Story first published: Friday, February 2, 2018, 11:11 [IST]
Other articles published on Feb 2, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+