Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு ஒழுங்கா ஆடலைன்னாலும் டீமில் வைத்து கொள்வோம்... கோச் நீங்களே இப்படி சொல்லலாமா?

மும்பை:ஒழுங்காக விளையாடவில்லை என்றாலும் தவான் எங்களுக்கு முக்கிய வீரர் என்று பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ராஞ்சி போட்டியில் தல தோனியின் சொந்த மண்ணில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகளும் ஆஸ்திரேலியாவை எளிதில் வென்ற இந்தியா போட்டியில் தோற்றது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.

313 ரன்கள் கடினமான இலக்கு என்ற போதிலும்.. விக்கெட்டுகளை இழக்காமல் ரன் விகிதத்தை உயர்த்தாமலும் அணியின் ஆட்டம் இருந்திருக்கிறது. குறிப்பாக நடுவரிசை வீரர்களை விட... தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்க தவறிவிட்டனர்.

தவான் மோசம்

தவான் மோசம்

அதில் தவானின் ஆட்டம் சுத்த மோசம். இந்தத் தொடரில், ராஞ்சி போட்டியையும் சேர்த்து அவர் எடுத்த ரன்கள் 22 தான். முதல் போட்டியில் டக் அவுட்... நேற்றைய போட்டியில் ஒரு ரன்.

17 போட்டி, 50 ரன்கள்

17 போட்டி, 50 ரன்கள்

கடைசியாக அவர் விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில், தவான் எடுக்கும் மூன்றாவது சிங்கிள் டிஜிட் ஸ்கோர் இது. கடைசியாக தவான் பங்கேற்ற 17 ஒருநாள் போட்டிகளில் 2 இன்னிங்ஸில் மட்டுமே 50 ரன்களை கடந்துள்ளார்.

இருமுறை டக் அவுட்

இருமுறை டக் அவுட்

6 தடவை ஒற்றை இலக்க எண்களிலும், இரண்டு முறை டக் அவுட்டும் ஆகியுள்ளார். 2019-ம் ஆண்டில், இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள தவான், அதில் சேர்த்தது 261 மட்டுமே.

சீரியசான விஷயம்

சீரியசான விஷயம்

ஓப்பனிங்கில் வரும் ரோகித்தும், தவானும், 6 போட்டிகளில் 50 ரன்கள் வரை தொடர்ந்து விளையாடவில்லை. உலகக்கோப்பை போட்டி நெருங்கும் வேளையில், இது மிகவும் சீரியசாக கவனிக்க வேண்டிய அம்சம் என்று கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.

பார்மில் ராகுல்

பார்மில் ராகுல்

தவான் சொதப்பிவரும் அதேவேளையில், மாற்று தொடக்க வீரரான ராகுல் பார்முக்கு திரும்பி உள்ளார். எனவே ரோகித், ராகுலை தொடக்க வீரர்களாக உலக கோப்பையில் களமிறக்கலாம் என்றும், தவானுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்றும் கம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

கோச் ஆதரவு

கோச் ஆதரவு

ஆனால், தவானுக்கு ஆதரவு குரல் எழுப்பியிருக்கிறார், பேட்டிங் கோச் சஞ்சய் பங்கார். அவர் கூறியதாவது:தவான், தனது ஷாட்டுகளை சரியாக கணித்து ஆடுவதில் கவனக்குறைவாக இருக்கிறார்.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

2வது போட்டியில், தவான் ஆட்டம் நன்றாக இருந்தது. எங்களை பொறுத்தவரை அவர் எங்களுக்கு ஒரு முக்கிய வீரர். ஒரு வேல்யூ உள்ள வீரர் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Saturday, March 9, 2019, 17:38 [IST]
Other articles published on Mar 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+