For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவருக்கு 2வது போட்டியில் டாட்டா கட்டாயம்..! பிரதர்சுக்கு காத்திருக்கும் பக்கா வாய்ப்பு

Recommended Video

IND VS WI 2019 2ND T20 | மாற்றங்களுடன் இந்திய அணி! சகோதரர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு

புளோரிடா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் கழற்றிவிடப் படுகிறார் தொடக்க வீரர் தவான்.

புளோரிடாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதல் போட்டியில் போராடி 4 விக். வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது.

முதல் ஆட்டம் ரொம்ப கவனத்தையும், இந்திய அணியின் தடுமாற்றத்தையும் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. வெறும் 96 ரன்கள் என்ற இலக்கை 6 விக்கெட்டுகளை இழந்து 18வது ஓவரில்தான் இந்திய அணி வென்றது.

தடுமாற்ற வெற்றி

தடுமாற்ற வெற்றி

அசால்ட்டாக அடித்திருக்கக்கூடிய இலக்கு... ஆனால் அதற்கே இந்திய அணி போராடியது. வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதலாக ஒரு 20 ரன்களை அடித்திருந்தால் இந்திய அணி கோவிந்தா தான்.

2வது ஆட்டம்

2வது ஆட்டம்

ஒருவழியாக முதல் போட்டியில் வென்ற நிலையில், 2வது போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

ராகுலுக்கு வாய்ப்பு

ராகுலுக்கு வாய்ப்பு

கடந்த போட்டியில் ஆடாத ராகுல், இந்த போட்டியில் தவானுக்கு பதிலாக களமிறக்கப்படலாம். டி2 0 போட்டிகளில் தவானுக்கு பதிலாக ராகுலையே தொடக்க வீரராக இறக்கலாம் என்ற கருத்து ஏற்கனவே உள்ளது. அந்த வகையில், இன்றைய போட்டியில் தவானுக்கு பதிலாக ராகுல் இறக்கப்பட வாய்ப்புள்ளது.

சாஹர் பிரதர்ஸ்

சாஹர் பிரதர்ஸ்

மேலும் கடந்த போட்டியில் ஆடிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரும், கலீல் அகமதுவுக்கு பதில் தீபக் சாஹரும் அணியில் எடுக்கப்படலாம். சாஹர் சகோதரர்களுக்கு வாய்ப்பு உறுதி என்று கூறலாம்.

விவரம்

விவரம்

2வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி: ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி(கேப்டன்), மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), க்ருணல் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, தீபக் சாஹர்.

Story first published: Sunday, August 4, 2019, 17:44 [IST]
Other articles published on Aug 4, 2019
English summary
Dhawan may miss todays match against west indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X