கவலை அளிக்கும் ஷிகார் தவான் பார்ம்!
செல்சம்போர்டு: இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் எஸ்ஸெக்ஸ் அணிக்கெதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனார்.
இன்னும் மூன்று தினங்களில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் ஷிகார் தவானின் மோசமான பார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கக்கூடியதாக உள்ளது.

ஷிகார் தவான் இந்திய அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2153 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 43.93 ஆகும்.
கடைசியாக அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் முதல் செசனில் சதம் அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அது இந்திய மண்ணில் நடைபெற்ற .போட்டியாகும்.
தவான் இங்கிலாந்து தொடரில் இதுவரை குறிப்பிடத்தகுந்த அளவில் எந்த போட்டிகளிலும் ஆடவில்லை. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் எடுத்த ரன்கள் மொத்தம் 19 தான். முதலாவது போட்டியில் 4 ரன்களும் ,இரண்டாவது போட்டியில் 10 ரன்களும், மூன்றாவது போட்டியில் 5 ரன்களையும் மட்டுமே எடுத்துள்ளார்.
ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 120 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். முதல் போட்டியில் 40 ரன்களும்,இரண்டாவது போட்டியில் 36 ரன்களும் மற்றும் மூன்றாவது போட்டியில் 44 ரன்களையும் எடுத்துள்ளார். ஒருபோட்டியில் கூட அவரால் அவரது சிறப்பான தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனார். இந்த போட்டி ட்ராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Story first published: Saturday, July 28, 2018, 18:39 [IST]
Other articles published on Jul 28, 2018


Click it and Unblock the Notifications