Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பு(மு)திய சாதனை படைக்கும் தவான்.. எந்த கேப்டனுக்கும் கிடைக்காத பெருமை - 37 ஆண்டு கால சாதனை க்ளோஸ்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான தொடரில் கேப்டனாக களமிறங்கவுள்ள ஷிகர் தவான், புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

Recommended Video

Shikhar Dhawan-க்கு இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு - Ajit Agarkar | Oneindia Tamil

இலங்கையில் சுற்றுப்பயணம் இந்திய 'ஏ' அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

விராட் கோலி தலைமையிலான மெயின் அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், இந்திய 20 வீரர்கள் கொண்ட 'ஏ' அணியை ஷிகர் தவான் தலைமையில் இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ.

 மாற்றப்பட்ட அட்டவணை

மாற்றப்பட்ட அட்டவணை

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே, ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதாக இருந்தது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறுவதாய் இருந்தது. ஆனால், இலங்கை அணியில் அதன் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகிய இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

 5 நாட்களுக்கு

5 நாட்களுக்கு

அதாவது, ஜுலை 13ம் தேதி தொடங்கவிருந்த ஒருநாள் போட்டிகள், ஜுலை 18ம் தேதிக்கு மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு தொடர் அப்படியே தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, முதல் ஒருநாள் போட்டி ஜுலை 18ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23ம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29ம் தேதியும் நடைபெறும் என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன.

 தவான் கேப்டன்

தவான் கேப்டன்

இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 புதிய சாதனை

புதிய சாதனை

இத்தொடரின் மூலம், இந்திய அணிக்கு மிக அதிக வயதில் கேப்டனாக பொறுப்பேற்கும் வீரர் எனும் பெயரை ஷிகர் தவான் பெறுகிறார். ஆம்! இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே, இவ்வளவு வயதான நபர் இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனானதில்லை. போட்டி தொடங்கும் நாளான வரும் ஜுலை 18ம் தேதி, தவானின் வயது 35 ஆண்டு 225 நாட்கள். இதன் மூலம், 37 ஆண்டுகால சாதனையை தவான் முறியடிக்க உள்ளார். இதற்கு முன், 1984ம் ஆண்டு இந்தியாவின் மொஹிந்தர் அமர்நாத் பாகிஸ்தானுக்கு எதிராக கேப்டனாக அறிமுகமான போது அவருக்கு வயது 34 வயதாகும். தற்போது அதை தவான் முறியடித்துள்ளார்.

Story first published: Wednesday, July 14, 2021, 17:34 [IST]
Other articles published on Jul 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+