கோலி தான் கேப்டன்..ஆனால் வீரர்கள் எல்லாம் தோனி பேச்சை தான் கேட்பாங்க – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தோனி குறித்து பல்வேறு கருத்துகளை கூறியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
Recommended Video
கேப்டன் பதவியில் கோலி இருந்த போது அணி எப்படி இருந்தது என்பதை தினேஷ் கார்த்திக் கூறினார். அது கிட்டதட்ட படையப்பா படத்தில வரும் நகைச்சுவை போல்
மாப்பிள்ளை இவர் தான் அவர் போட்டு இருக்கிற டிரஸ் என்னதுனு என்ற காட்சி தான் நினைவுக்கு வரும். தினேஷ் கார்த்திக் அளித்த இந்தப் பேட்டியை தற்போது காணலாம்.

தோனி அறிவுரை
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தற்போது விக்கெட் எடுக்க முடியாமல் திணறுகின்றனர். அதற்கு தோனி இல்லாதது தான் காரணம். குறிப்பாக சாஹல் மற்றும் குல்தீப் இருவரும் தோனி இருந்த காலத்தில் சிறந்து விளங்கினார்கள். அவர்கள் பந்துவீசும் போது தோனி எப்படி வீச வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்.

தோனி பேச்சை கேட்பார்கள்
அதன் படி தான் வீரர்கள் பந்துவீசுவார்கள். தற்போது நிலை அப்படி அல்ல. தோனிக்கு பிறகு விராட் கோலி தான் கேப்டனாக இருந்தார். ஆனால், வீரர்கள் அனைவரும் தோனியின் பேச்சையே கேட்போம். தோனியின் அனுபவம் அணியில் இருந்த இளம் வீரர்களுக்கு நல்ல பயனை தந்தது.

தோனி தான் டாப்பர்
தோனியும், தானும் ஒரே நேரத்தில் தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினோம். அணியில் தோனி இருப்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் எனக்கு அவர் மீது துளி கூட பொறாமை இருந்தது கிடையாது. மாறாக மரியாதை தான் இருந்தது. நான் படித்த பல்கலைக்கழகத்தில் தோனி தான் டாப்பர்

சரியாகிவிடும்
தற்போது அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். காயத்திலிருந்து குணமடைந்து சில வீரர்கள் அணிக்கு வந்தால் சிக்கல் தீர்ந்துவிடும். இந்த தோல்வியால் மனவருத்தம் அடைய தேவையில்லை.கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் விராட் கோலி ஒரு சிறந்த வீரராக அணிக்காக தான் விளையாடுவார்


Click it and Unblock the Notifications