விக்கெட் கீப்பிங்கில் 800.. தோனி புதிய மைல்கல்.. ஆசிய கோப்பை இறுதியில் எட்டினார்
Recommended Video

துபாய் : தோனி நேற்று நடந்த ஆசிய கோப்பை இறுதியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த மைல்கல் சாதனை விக்கெட் கீப்பிங்கில் நிகழ்ந்துள்ளது.
நேற்றைய ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேச அணியை கடைசி பந்தில் வீழ்த்தியது. பேட்டிங்கில் இந்தியா வழக்கம் போல சொதப்பியது. தோனி உட்பட நடுவரிசை பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர்.
எனினும், நேற்று இந்தியா பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. தோனி விக்கெட் கீப்பிங்கில் கலக்கினார். வங்கதேசத்தை 222 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி.

மைல்கல் என்ன?
நேற்று வங்கதேச அணியின் கேப்டன் மஷ்ரபே மொர்டாசாவை ஸ்டம்பிங் செய்தார் தோனி. ஒரு விக்கெட் கீப்பராக அது தோனியின் 800வது விக்கெட் ஆகும். விக்கெட் கீப்பிங்கில் அவர் பிடித்த கேட்ச்கள் மற்றும் செய்த ஸ்டம்பிங்-களை கணக்கில் எடுத்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

800 விக்கெட்களில் தோனி
தோனி இதுவரை டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகள் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 616 கேட்ச்கள் மற்றும் 184 ஸ்டம்பிங் செய்துள்ளார். மொத்தமாக 800 விக்கெட்கள் எடுக்க காரணமாக இருந்துள்ளார் தோனி. உலக கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்த காரணமாக இருந்தவர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் தோனி.

சிறந்த விக்கெட் கீப்பர்கள் யார்?
தோனியை விட அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் தென்னாபிரிக்காவின் மார்க் பௌச்சர் (998 விக்கெட் வீழ்ச்சிகள்) மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் (905 விக்கெட் வீழ்ச்சிகள்). இவர்கள் இருவருமே கேட்ச்கள் தான் அதிகம் பிடித்துள்ளனர். பௌச்சர் 952 கேட்ச்களும், கில்கிறிஸ்ட் 813 கேட்ச்களும் பிடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் அதிக கேட்ச்கள் பிடித்த விக்கெட் கீப்பர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் தோனி.

ஸ்டம்பிங் சாதனை பட்டியல்
மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து அதிக ஸ்டம்பிங் செய்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி. தோனி 184 ஸ்டம்பிங் செய்துள்ளார். அடுத்த இடங்களில் சங்கக்காரா (139), கலுவிதரானா (101) ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications