Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீம்ல அவரு இல்லை... ரொம்ப கஷ்டம் தான்...என்ன பண்றது... யோசிக்கும் தோனி

மும்பை: லுங்கி நிகிடி சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் பங்கேற்க முடியாமல் போனது பெரிய இழப்பு என்று தல தோனி கூறியிருக்கிறார்.

ஐபிஎல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கி இருக்கிறது. இதுவரை 3 முறை கோப்பையை வென்றற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனையும் வெற்றி கரமாக தொடங்கி இருக்கிறது.

ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியில் அந்த அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது. அதையடுத்து நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்றது.

சென்னை வெற்றி

சென்னை வெற்றி

பெங்களூருக்கு எதிரான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. அந்த போட்டியில் ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகிய மூவரும் இணைந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஸ்லோ பிட்ச்

ஸ்லோ பிட்ச்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. அந்த ஆடுகளமும் மிகவும் ஸ்லோவாக இருந்தது. எனினும் சிஎஸ்கே அணி வென்றது.

மேம்பட வேண்டும்

மேம்பட வேண்டும்

போட்டிக்கு பின்னர் டெல்லி ஆடுகளம் குறித்து தோனி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:பீல்டிங்கில் சிஎஸ்கே அணி மிக சிறந்ததாக இல்லை, இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

பெரிய இழப்புதான்

பெரிய இழப்புதான்

தென் ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி சிஎஸ்கே அணிக்காக இந்த சீசனில் ஆட முடியாமல் போயிருக்கிறது. அது அணிக்கு பெரிய அடி என்று கூறியிருக்கிறார். லுங்கி நிகிடி, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 27, 2019, 15:25 [IST]
Other articles published on Mar 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+