Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 போட்டியில் டோணிக்கு தடை-ஷேவாக் கேப்டன்

Sehwag
நாக்பூர்: இலங்கைக்கு எதிரான நாக்பூர் ஒரு நாள் போட்டியில் இந்தியா மெதுவாக பந்து வீசியதால் கேப்டன் டோணிக்கு 2 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கைக்கு எதிரான 3 மற்றும் 4வது ஒருநாள் போட்டிகளில் ஷேவாக் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாக்பூரில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியா எடுத்த 301 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த இலங்கை 302 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய பந்து வீசசாளர்கள் மெதுவாக பந்து வீசியதாக குற்றம் சாட்டியுள்ள போட்டி நடுவர் ஜெப் குரோ இதற்காக கேப்டன் டோணிக்கு 2 போட்டிகளில் ஆட தடை விதித்துள்ளார்.

இதனால் இந்தியாவுக்கு பெரும் நெருக்குதல் ஏற்பட்டது. டோணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஷேவாக் மற்றும் 4வது போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3வது போட்டி 21ம் தேதி கட்டாக்கிலும் 4வது போட்டி கொல்கத்தாவில் 24ம் தேதியும் நடைபெறவுள்ளது.

டோணிக்கு விதிகக்ப்பட்ட தடை தவிர இந்திய அணிக்கு 40 சதவீத போட்டிக் கட்டணம் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

திணேஷ் கார்த்திக் சேர்ப்பு:

டோணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருக்குப் பதில் அணியில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக திணேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+