Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நீக்கத்துக்கு தோனி தான் காரணமா...? பரபரப்பு டுவிஸ்ட்

Recommended Video

Sanjay Bangar : தோனியை நான் தான் 7ம் இடத்தில் விளையாட அனுப்பினேன் - சஞ்சய் பங்கர்- வீடியோ

மும்பை: பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நீக்கப்பட்டதற்கு, தோனியின் பேட்டிங் ஆர்டர் விவகாரம் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கோப்பை தொடர் முடிந்து, இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருக்கிறது. அணியில் உள்ள அனைத்து பயிற்சியாளர்களின் பதவிக் காலம் உலக கோப்பையுடன் முடிந்துவிட்டாலும், வெஸ்ட் இண்டீஸ் தொடர் காரணமாக 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த தொடருக்குள் அணியின் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ரவி சாஸ்திரியே மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கேள்விகள், சர்ச்சைகள்

கேள்விகள், சர்ச்சைகள்

அந்த நியமனம் பல கேள்விகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. கபில்தேவ் தலைமையிலான தேர்வுக் குழுவின் செயல்பாடுகள் கேள்விக்கு ஆளாகின. எந்த அடிப்படையில் தேர்வு என்பது ரகசியம் என்று அவர் கூறியதால், சந்தேகங்கள் அதிகமாயின.

கோலி ஆதரவு

கோலி ஆதரவு

மற்ற போட்டியாளர்களில் ஒருவரான மைக் ஹெசனின் பெயரை ஆங்கிலத்தில் சரியாக எழுத தெரியாத தேர்வுக்குழு. விராட் கோலியின் ஆதரவு, கபிலின் ஆதரவு காரணமாக ரவி சாஸ்திரி தேர்வானார் என்று கேள்விகள் எழுந்தன.

சஞ்சய் பங்கர்

சஞ்சய் பங்கர்

இந் நிலையில் அணியின் மற்ற பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் முடிந்தது. மற்ற பயிற்சியாளர்களாக ஏற்கனவே இருந்தவர்கள் தொடர்கின்றனர். சஞ்சய் பங்கர் என்ற பேட்டிங் பயிற்சியாளரை தவிர. அவருக்கு பதிலாக முன்னாள் வீரர் விக்ரத் ரதோர் பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு பெற்றிருக்கிறார்.

அந்த தகவல்கள்

அந்த தகவல்கள்

ஒருவர் மட்டுமே ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கான புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. சஞ்சய் பங்கரை நிச்சயம் மாற்றியே தீரவேண்டும் என்று முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. அதற்கு தோனியின் விவகாரம் தான் முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தோல்வி தந்த அரையிறுதி

தோல்வி தந்த அரையிறுதி

அதாவது, நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா தோற்று போனது. அதற்கு முக்கிய காரணம் அணியின் பேட்டிங் வரிசையை மாற்றியது. 7வது வீரராக களம் இறங்கினார் தோனி. இதுவே தோல்விக்கு வித்திட்டது. அதற்கு காரணம் யார் என்று கேள்விகள் எழுந்தன.

அந்த விளக்கம்

அந்த விளக்கம்

சர்ச்சைகளும், நெருக்கடிகளும் அதிகமாகவே, ஒரு கட்டத்தில் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் விளக்கம் அளித்தார். தாம்தான் தோனியை 7ம் இடத்தில் இறக்கியதாகவும், அணியின் கூட்டு முடிவு என்றும் கூறினார். அவரின் இந்த விளக்கம் அணி நிர்வாகத்திலும், ரசிகர்கள் புகைச்சலை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

அதிருப்தி

அதிருப்தி

இந்த விவகாரத்தை லீக் செய்த காரணத்தால் அணி நிர்வாகம் சஞ்சய் பங்கர் மீது ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்தது. தற்போது பயிற்சியாளர் நியமனத்தில், அதை முன்வைத்து அவரை கழற்றிவிட்டதாக கிரிக்கெட் வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, August 23, 2019, 12:22 [IST]
Other articles published on Aug 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+