For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியால் மொத்த சிஎஸ்கே டீமுக்கும் பிரஷர்.. முன்னாள் ஆஸி. வீரர் சொன்ன உண்மை!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு தோல்விகளால் துவண்டு போயுள்ளது.

அந்த இரண்டு போட்டிகளிலும் அந்த அணியின் திட்டம் படு தோல்வி அடைந்ததே துவண்டு போகக் காரணம்.

இந்த நிலையில், அதற்கு என்ன காரணம் என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பிரெட் லீ தன் கருத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது தோனியால் மொத்த சிஎஸ்கே அணிக்கும் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை பற்றி அவர் கூறினார்.

சிஎஸ்கே அணி தோல்விகள்

சிஎஸ்கே அணி தோல்விகள்

2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அதன் பின் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அடுத்தடுத்து சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது.

சிக்கல்கள்

சிக்கல்கள்

சிஎஸ்கே அணியில் ரெய்னா இல்லாததால் பேட்டிங்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய அம்பதி ராயுடு அடுத்த இரண்டு போட்டிகளில் ஆட வில்லை. துவக்க வீரர்களும் மிக நிதானமாக ரன் சேர்த்து அடுத்து வரும் வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

தோனி பேட்டிங்

தோனி பேட்டிங்

இதில் முக்கிய பிரச்சனையாக இருப்பது தோனியின் பேட்டிங் ஆர்டர் தான். அவர் நான்காம் வரிசையில் இறங்கி ஆடுவார் என எதிர்பார்த்த அனைவரும், அவர் ஏழாம் வரிசையில் இறங்கி ரன் குவிக்க முடியாமல் திணறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிரெட் லீ என்ன சொன்னார்?

பிரெட் லீ என்ன சொன்னார்?

இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ, சிஎஸ்கே அணி வெற்றி பெறத் துவங்க வேண்டும். அவர்களிடம் சரியான அணி உள்ளது. ஆனால், சரியான இடத்தில் வீரர்கள் ஆடவில்லை. தோனியின் பேட்டிங் வரிசை குறித்த பேச்சு மொத்த அணிக்கும் அழுத்தத்தை கொடுத்து வருகிறது என்றார்.

சரி செய்ய வேண்டும்

சரி செய்ய வேண்டும்

தோனி தன் பேட்டிங் வரிசை மட்டுமின்றி ஆறு பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்யவும் திட்டமிட வேண்டும். அதே போல, அம்பதி ராயுடு அணியில் ஆட வைக்க வேண்டும். அவர் காயத்தில் இருந்தால் தோனி தானே பேட்டிங் ஆர்டரில் முன்னேறி ஆட வேண்டும்.

Story first published: Monday, September 28, 2020, 19:17 [IST]
Other articles published on Sep 28, 2020
English summary
IPL 2020 News in Tamil : Dhoni batting position causes pressure on CSK teams says Brett Lee.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+