For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

India vs Australia : கடைசி 2 ஒருநாள் போட்டி... தோனியை உட்கார வைத்த பிசிசிஐ... ரசிகர்கள் நறநற

Recommended Video

கடைசி 2 ஒருநாள் போட்டி, தோனியை உட்கார வைத்த பிசிசிஐ- வீடியோ

மும்பை:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளிலிருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

Dhoni to be rested for 4th and 5th ODI against australia

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி, ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்காக ஒவ்வொரு அணியும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றது.

ஆஸ்திரேலியாவிடம் டி 20 தொடரை இந்தியா இழந்திருக்கிறது. 3 ஒருநாள் போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. ராஞ்சியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.

ராஞ்சி போட்டியில் இந்தியா தோற்றாலும்... கில்லி கோலி புதிய சாதனை.. என்னன்னு பாருங்க ராஞ்சி போட்டியில் இந்தியா தோற்றாலும்... கில்லி கோலி புதிய சாதனை.. என்னன்னு பாருங்க

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 10, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அந்த 2 போட்டிகளிலும் இருந்து தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுளளது. உலக கோப்பைக்கு முன் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Story first published: Saturday, March 9, 2019, 10:37 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
MS Dhoni will not be playing the last two ODIs of the ongoing five-match series against Australia. He is going to take rest after this.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X