Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதனால் என்ன, ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி.. சென்னை ரசிகர்களின் "ஃபீலிங்ஸ்"!

சென்னை: 2008ம் ஆண்டு நடந்த முதலாவது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது ரூ. 7.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானவர் டோணி. இப்போது புதிய அணிக்கு மாறியுள்ள அவர் ரூ. 12.5 கோடிக்கு விலை போயுள்ளார்.

கடந்த 8 வருடமாக சென்னை சூப்பர் கிங்ஸின் அசைக்க முடியாத கேப்டனாக வலம் வந்தவர் டோணி. டோணி மட்டுமே தொடர்ந்து ஒரே அணியின் கேப்டனாக கடந்த 8 வருடமாக வலம் வந்தவர் ஆவார்.

தற்போது புதிய அணியாக புனே அணிக்குள் காலடி எடுத்து வைக்கிறார் டோணி. அவருடைய ராசி புனே அணிக்கும் பரவி வெற்றிகளைத் தேடித் தருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சென்னையின் பெருமை

சென்னையின் பெருமை

சென்னையின் பெருமையாக வலம் வந்தவர் டோணி. 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டி முதல் கடைசியாக இந்த ஆண்டு நடந்த போட்டி வரை 8 தொடர்களாக சென்னையின் கேப்டனாக கலக்கியவர் டோணி.

2 கோப்பை

2 கோப்பை

2 முறை கோப்பையை வென்றது சென்னை. அதை விட அனைத்துத் தொடர்களிலும் நாக் அவுட் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற ஒரே அணி சென்னை மட்டுமே. சென்னையின் கேப்டனாக டோணி கலக்கியது மட்டுமல்லாமல் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோரும் டோணிக்குத் துணை நின்றனர்.

மஞ்சள்னா டோணி

மஞ்சள்னா டோணி

கிரிக்கெட்டில் மஞ்சள் நிறமென்றால் அது ஆஸ்திரேலியாவைத்தான் குறிக்கும். ஆனால் அதை மாற்றிப் போட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டோணிக்காகவே இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ரசிகர்கள் கிடைத்தனர்.

நேரம் சரியில்லை.. வேற வீடு பார்ப்போம்

நேரம் சரியில்லை.. வேற வீடு பார்ப்போம்

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் டோணி வேறு அணிக்கு மாறும் நிலைக்கு வந்துள்ளார். அந்த புதிய வீடு புனே அணியாக அமைந்துள்ளது.

கில்லாடி கேப்டன்

கில்லாடி கேப்டன்

புனே அணிக்கு நிச்சயம் டோணி பெரிய பலமாக இருப்பார். ஒரு கேப்டனாக புனே அணி டோணியால் பலம் பெறும், புகழும் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அஸ்வின் - மெக்கல்லம்

அஸ்வின் - மெக்கல்லம்

டோணி தவிர புனே அணிக்கு மெக்கல்லம், அஸ்வின் ஆகியோரும் கிடைத்துள்ளனர். அதை விட முக்கியமாக ராஜஸ்தான் அணியின் அஜிங்கியா ரஹானேவும், ஸ்டீவ் ஸ்மித்தும் வந்துள்ளனர். இருவரும் அபாரமான வீரர்கள்.

அடித்துத் துவைக்கப்பட்ட காலம் போய் விடும்

அடித்துத் துவைக்கப்பட்ட காலம் போய் விடும்

2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் அப்போது இருந்த புனே வாரியர்ஸ் அணியை ஆளாளுக்குப் போட்டுத் துவைத்து எடுத்தார்கள். குறிப்பாக பெங்களூர் அணியின் கெய்ல் அடித்து நொறுக்கினார். அதுபோன்ற நிலை புதிதாகப் பிறந்துள்ள புனே அணிக்கு இனி வராது என்று நம்பலாம்.

ராமன் இருக்கும் இடமே அயோத்தி

ராமன் இருக்கும் இடமே அயோத்தி

டோணி இல்லாதது சென்னை ரசிகர்களுக்கு நிச்சயம் இழப்புதான் என்றாலும் ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்பதைப் போல டோணி இருக்கும் அணியை ஆதரித்து "விசிலடிக்க" ரசிகர்கள் தயாராகி விட்டனர்.

Story first published: Tuesday, December 15, 2015, 14:12 [IST]
Other articles published on Dec 15, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+