Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீட்டில் இதை செஞ்சு பாருங்க.... ஆனால் தோனி என்ன செய்கிறார்.... குழம்பும் ரசிகர்கள்!

Recommended Video

வீட்டில் இதை செஞ்சு பாருங்க...தோனி என்ன செய்கிறார்...குழம்பும் ரசிகர்கள்!- வீடியோ

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தயாராகும் நிலையில், கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டித் தொடர் இன்று துவங்குகிறது. பெரும் எதிர்பார்ப்பை இந்தத் தொடர் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Dhoni bicycle video confuses fans

அந்த வீடியோவில், ஒரு சிறிய சைக்கிளில் தோனி உட்கார்ந்துள்ளார். ஹெட்போன், கூலிங் கிளாஸ் அணிந்துள்ள தோனி, வாயில் ஒரு மரக்கட்டையை வைத்துக் கொள்கிறார். சட்டங்கள் பொருத்தப்பட்ட அந்த சைக்கிளில் ஒரு சரிவில் இருந்து இறங்குகிறார்.

37 வயதானாலும், விக்கெட்களுக்கு இடையே ஓடுவதில், இளம் வீரர்களை மிஞ்சக்கூடிய தோனி, ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்கிறார் என்பதுபோல் அந்த வீடியோ உள்ளது.

ஒரு ஜாலிக்காகத்தான். வீட்டில் இதை செய்து பாருங்க என்று அந்த வீடியோ குறித்து இன்ஸ்டாகிராமில் தோனி கூறியுள்ளார். ஆனால் தோனி செய்வது உடற்பயிற்சியா, வீர சாகசமாக, எதற்காக இப்படி செய்கிறார் என்பதற்காக பதில் இல்லாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். உங்களுக்கு தெரிந்தால், புரிந்தால் கொஞ்சம் எல்லோரும் சொல்லுங்க.

Story first published: Wednesday, August 1, 2018, 11:46 [IST]
Other articles published on Aug 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+