For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி வாய்ப்பு.. இதைப் பண்ணா டீமுக்குள்ள வரலாம்.. தோனிக்கு செக் வைத்த பிசிசிஐ!

மும்பை : இந்திய அணியில் தோனி மீண்டும் இடம் பெற கடைசி வாய்ப்பை அளித்துள்ளது பிசிசிஐ.

ஆம், 2020 ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடி ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியும் என்ற நிலையில் இருக்கிறார் தோனி.

இந்த கருத்தை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீண்டும் ஒரு முறை கூறி இருக்கிறார்.

தோனி நிலை

தோனி நிலை

தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவராகவே விடுப்பில் இருப்பதாக சிலரும், இந்திய அணி நிர்வாகம் அவரை ஒதுக்கி வைத்திருப்பதாக சிலரும் கூறி வருகின்றனர்.

எதிர்காலம் கேள்விக் குறி

எதிர்காலம் கேள்விக் குறி

தோனியின் எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ளது. அவர் மீண்டும் கிரிக்கெட் ஆடுவாரா? இல்லையா? என்பது மர்மமாக உள்ளது. அவர் விளையாட விருப்பமாக இருப்பதாக தகவல்கள் வந்தாலும், பிசிசிஐ அவரை அணியில் சேர்க்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை

இந்திய அணி அடுத்தகட்டமாக 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. 50 ஓவர் உலகக்கோப்பையில் நடந்த தவறுகள் எதுவும் நடக்கக் கூடாது என்ற முடிவில் இருக்கும் அணி நிர்வாகம் இளம் வீரர்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.

ரிஷப் பண்ட் முன்னிலை

ரிஷப் பண்ட் முன்னிலை

இந்திய அணியில் தற்போது இளம் வீரர் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக இடம் பெற்று ஆடி வருகிறார். அவர் சரியாக ஆடாவிட்டாலும் அவருக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளிக்க இந்திய அணி முடிவு செய்துள்ளது.

வரிசை கட்டும் வீரர்கள்

வரிசை கட்டும் வீரர்கள்

ஒருவேளை ரிஷப் பண்ட் சரியாக ஆடாவிட்டாலும், அடுத்த கட்ட வீரர்களும் வரிசையில் காத்துக் கொண்டு உள்ளனர். அவர்களில் சஞ்சு சாம்சன் ஏற்கனவே அணியில் மாற்று வீரராக இடம் பெற்று வருகிறார்.

ராகுலுக்கும் வாய்ப்பு

ராகுலுக்கும் வாய்ப்பு

மேலும், துவக்க வீரராக தற்போது ஆடி வரும் கேஎல் ராகுலும் விக்கெட் கீப்பர் தான். 2௦20 டி20 உலகக்கோப்பை வரை சரியான விக்கெட் கீப்பர் அமையாவிட்டால் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தவும் இந்தியா தயங்காது என கூறப்படுகிறது.

சிக்கலில் தோனி

சிக்கலில் தோனி

அதனால், தோனி கடைசி வரை இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய தேர்வுக் குழுவும் தோனியை தாண்டி இந்தியா அணி வந்துவிட்டது என கருத்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்-இல் ஆடுவார்

ஐபிஎல்-இல் ஆடுவார்

இந்நிலையில், தோனிக்கு ஐபிஎல் மட்டுமே கடைசி வாய்ப்பாக அமைந்துள்ளது. பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம், ஐபிஎல்-இல் தோனி அட்டகாசமாக ஆடி தன் பேட்டிங் பார்மை நிரூபிக்கும் பட்சத்தில் அவரை இந்திய அணியில் சேர்ப்பது பற்றி பரிசீலனை செய்யும் திட்டத்தில் உள்ளது.

ஐபிஎல்-லுக்குப் பின் மாற்றம்

ஐபிஎல்-லுக்குப் பின் மாற்றம்

2௦20 ஐபிஎல் தொடருக்குப் பின் இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மட்டுமே தோனி அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் ஓய்வு

ஒருநாள் போட்டிகளில் ஓய்வு

இதற்கிடையே, தோனி டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்ற தகவலை கூறி இருக்கிறார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

Story first published: Friday, January 10, 2020, 15:48 [IST]
Other articles published on Jan 10, 2020
English summary
Dhoni can return to Indian team only by performing in IPL, accoeding to BCCI sources.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+