Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படியே இம்ரான் கான் மாதிரியே இருக்கார் டோணி... சோயப் அக்தர்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் மாதிரியே செயல்படுகிறார் இந்திய கேப்டன் டோணி என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.

சச்சின் உள்பட உலகின் முன்னணி ஆட்டக்காரர்களை ஒரு காலத்தில் தனது அதி வேகப் பந்து வீ்ச்சால் மிரட்டியவர் சோயப் அக்தர்.

இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கார் யூனுஸ் ஆகியோரின் வாரிசாக கருதப்பட்ட அவர் தனது முரட்டுத்தனத்தால் புகழை இழந்து அதல பாதாளத்திற்குப் போய் இப்போது கிரிக்கெட்டிலிருந்தே போய் விட்டார். இந்த நிலையில் இந்திய கேப்டன் டோணியை இம்ரான் கானுடன் ஒப்பிட்டுள்ளார் சோயப் அக்தர்.

இந்திய கிரிக்கெட்டின் புகழுக்கு டோணிதான் காரணம்

இந்திய கிரிக்கெட்டின் புகழுக்கு டோணிதான் காரணம்

இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய பெரும் முன்னேற்றத்திற்கு ஐபிஎல் காரணம் இல்லை. டோணி என்ற ஒரே ஒரு நபர்தான் இதற்குக் காரணம்.

கவர்ச்சி இல்லாவிட்டாலும் காரியத்தி்ல் சூப்பர்

கவர்ச்சி இல்லாவிட்டாலும் காரியத்தி்ல் சூப்பர்

இம்ரான் கானைப் போல கவர்ச்சிகரமானவராக டோணி இல்லாமல் இருக்கலாம். ஆனால், இம்ரானிடம் உள்ள அத்தனை குணங்களும் டோணியிடம் உள்ளது.

வீரராக, கேப்டனாக கலக்குகிறார்

வீரராக, கேப்டனாக கலக்குகிறார்

ஒரு வீரராக, கேப்டனாக கலக்கியவர் இம்ரான். அதேபோலத்தான் டோணியும் பிரமாதமாக செயல்படுகிறார்.

புது அர்த்தம் கொடுத்தவர்கள்

புது அர்த்தம் கொடுத்தவர்கள்

இம்ரானும் சரி, டோணியும் சரி தங்களது வாழ்க்கைக்கும், தாங்கள் ஆடிய அணிக்கும் புது அர்த்தம், புது வாழ்வுகொடுத்தவர்கள் என்றார் அக்தர்.

Story first published: Thursday, September 12, 2013, 15:45 [IST]
Other articles published on Sep 12, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+