Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கேப்டன்சி எப்படி தெரியுமா? ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்!

சென்னை : கிரிக்கெட் உலகில் சிறந்த கேப்டன்கள் வரிசையில் தோனிக்கு முன்னணி இடம் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கிரிக்கெட் உலகின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஐபிஎல் தொடரில் தோனியின் கேப்டன்சியில் ஆடி உள்ளார்.

அப்போது தோனியின் கேப்டன்சியை அருகே இருந்து பார்த்துள்ள அவர், அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் புகழ்ந்து பேசி உள்ளார்.

தோனி

தோனி

2020 ஐபிஎல் தொடர் விரைவில் நடக்க உள்ளது. தோனி கடந்த ஓராண்டாக கிரிக்கெட் ஆடாத நிலையில், அவர் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். தோனியும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தீவிர பயிற்சி செய்து வருகிறார்.

தோனியின் ஐபிஎல் கேப்டன்சி

தோனியின் ஐபிஎல் கேப்டன்சி

தோனியின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி இதுவரை அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே-ஆஃப் வரை சென்றுள்ளது. இந்திய அணியிலும், சிஎஸ்கே அணியிலும் அவரது கேப்டன்சி குறித்து பாராட்டாதவர்களே இல்லை. அவர் பந்துவீச்சாளர்களை நடத்தும் விதம் குறித்து பலரும் கூறி உள்ளனர்.

முத்தையா முரளிதரன் என்ன சொன்னார்?

முத்தையா முரளிதரன் என்ன சொன்னார்?

அது குறித்து தோனியின் கேப்டன்சியில் ஆடிய முத்தையா முரளிதரன் பேசி உள்ளார். அவர் கூறுகையில், தோனி பந்துவீச்சாளர்களை முதலில் பீல்டிங் நிறுத்த அனுமதிப்பார். ரன்கள் அதிகம் போனால் மட்டுமே அதில் மாற்றம் செய்வார் என்றார்.

தோனியை பாராட்டிய முரளிதரன்

தோனியை பாராட்டிய முரளிதரன்

மேலும், தோனி ஏதேனும் அறிவுரை அல்லது மாற்றம் குறித்து பேச வேண்டும் என்றால் அதை தனிமையில் தான் சொல்வார். பொதுவெளியில் சொல்ல மாட்டார் என அவரது குணம் பற்றி பாராட்டினார். அதே போல, நல்ல பந்துகளில் சிக்ஸ் அடித்தாலும் கூட அதற்கு பாராட்டு தெரிவிப்பார் என்றார்.

பீல்டிங்

பீல்டிங்

"2007இல் அவர் கேப்டனாக செயல்பட்டு வென்ற போது நிச்சயம் தோனி இளம் கேப்டன் என்று தான் சொல்வேன். ஆனால், அவரது யோசனைகள் பார்க்க நன்றாக இருக்கும். அவர் பந்தை பந்துவீச்சாளரிடம் கொடுத்து பீல்டிங் நிறுத்தச் சொல்வார். அது வேலை செய்யவில்லை என்றால் தன் பீல்டிங் நிறுத்தத்தை அனுமதிக்க கோருவார்" என்றார் முத்தையா முரளிதரன்.

சிக்ஸ் போனாலும் கை தட்டுவார்

சிக்ஸ் போனாலும் கை தட்டுவார்

"தோனி நல்ல பந்து சிக்ஸ் போனால் கூட கை தட்டுவார். பந்துவீச்சாளரிடம் அது நல்ல பந்து என்பார். பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்தால் கூட அதைப் பற்றி கவலை இல்லை. அவரது பாராட்டுக்கள் அப்படித் தான் இருக்கும்" என்றார் முத்தையா முரளிதரன்.

தனியாக சொல்வார்

தனியாக சொல்வார்

மேலும், "அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூற தனியாக அழைப்பார். பொதுவெளியில் அதை செய்ய மாட்டார். அது போன்ற குணங்களால் தான் அவர் வெற்றிகரமான கேப்டனாக விளங்குகிறார்" என்று பாராட்டினார் முரளிதரன்.

மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

மேலும் முரளிதரன் கூறுகையில், "தோனி மூத்த வீரர்களிடம் அறிவுரைகளை கேட்டு பின் அதை வைத்து முடிவு செய்வார், ஐபிஎல்-இல் வீரர்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என பார்க்க மாட்டார். ஆனால், போட்டிகளை வென்று கொடுக்கும் வீரர்கள் வேண்டும் என்று மட்டுமே நினைப்பார்." என்றார்.

Story first published: Monday, August 10, 2020, 21:20 [IST]
Other articles published on Aug 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+