இந்திய அணிக்காக கிறிஸ்துமஸ் தாத்தாவான டோணி... பினிஷிங் கிங் சான்டா!
மும்பை: நேற்று மும்பையில் இந்தியா மற்றும் இலங்கை மோதிய மூன்றாவது டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அபாரமாக வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த வருடத்தின் கடைசி போட்டி என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இதை பார்க்க வந்தனர். இந்த போட்டிக்கு பின் டோணி மற்ற இந்திய வீரர்களுடன் சேர்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. மேலும் பாண்டியாவும் இதுகுறித்து டிவிட்டரில் போஸ்ட் போட்டு இருக்கிறார்.

பினிஷர் கிங்
நேற்றை போட்டியில் இந்திய அணிக்கு 136 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் போட்டியை முடித்துவிடுவார்கள் என்று நினைத்த போது வரிசையாக விக்கெட்கள் விழுந்தது. இதனால் எப்போதும் போல டோணி போட்டியை தனது பேட் மூலம் முடித்து வைத்தார். கடைசி பந்தில் அவர் அடித்த பவுண்டரி தான் இந்த வருடத்தின் கடைசி பவுண்டரி ஆகும்.
கிறிஸ்துமஸ்
இந்த போட்டி முடிந்த பின் இந்த வீரர்கள் சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது முதல் முதலாக டோணியின் தலையில் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியை மாட்டிவிட்டு அழகு பார்த்தார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
பாண்டியாவும் போட்டோ வெளியிட்டார்
டோணி போட்டோ வைரல் ஆனது போலவே பாண்டியாவின் கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பும் வைரல் ஆனது. சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பாண்டியா தொடர்ந்து வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு டிரெண்டிங்கில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டம்
இந்த நிகழ்விற்கு பின் இந்திய அணிக்கு டி-20 தொடருக்கான கோப்பை வழங்கப்பட்டது. இந்த கோப்பை வாங்கும் போது அனைவரும் கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பில் இருந்தனர். இந்தியா ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை மொத்தமாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications