Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப கவலைப்படாதே.. இங்க டிஆர்எஸ்-லாம் கிடையாது.. தோனி நச் கமெண்ட்.. பயிற்சியில் நடந்த சம்பவம்!

துபாய் : சென்னை சூப்பர் கிங்ஸ் பலபிரச்சனைகளை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு 2020 ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்து வருகிறது.

Recommended Video

ஐ.பி.எல் 2020ல் அதிக சம்பளம் வாங்கும் 10 வீரர்கள் !

சிஎஸ்கே அணியின் பயிற்சியின் போது தோனி அடித்த கமெண்ட் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

கடுமையான சோதனைகளுக்கு இடையேயும் தோனி இயல்பாக இருப்பதை சுட்டிக் காட்டி தோனி ரசிகர்கள் அதை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

2020 ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி செய்து தயாராகி வருகிறது. முன்னதாக அந்த அணி சென்னையில் ஆறு நாள் பயிற்சி முகாம் நடத்தி இருந்தது. அதன் பின் துபாய் வந்தது. பிசிசிஐ விதிமுறைப்படி அனைத்து வீரர்களும் ஆறு நாள் குவாரன்டைனில் இருந்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

அப்போது எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனைகளில் அணியின் வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அதனால், சிஎஸ்கே அணியின் பயிற்சித் திட்டங்கள் தடைபட்டன.

ரெய்னா, ஹர்பஜன் சிங்

ரெய்னா, ஹர்பஜன் சிங்

அடுத்து அணியில் இடம் பெற்றுள்ள அனுபவ வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் சொந்த காரணங்களால் விலகினர். அவர்களுக்கு மாற்று வீரர்களை சிஎஸ்கே தேர்வு செய்யவில்லை. அவர்கள் இழப்பை எப்படி ஈடுகட்டப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.

கால தாமதமாக பயிற்சி

கால தாமதமாக பயிற்சி

இந்த நிலையில் தான், மற்ற ஐபிஎல் அணிகளை விட ஒரு வாரம் கால தாமதமாக சிஎஸ்கே அணி பயிற்சி செய்யத் துவங்கியது. பயிற்சியில் கேப்டன் தோனி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் இயல்பாகவே காட்சி அளித்தனர்.

பயிற்சி வீடியோ

பயிற்சி வீடியோ

இந்த நிலையில், வீரர்கள் பயிற்சி செய்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது சிஎஸ்கே அணி. அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் தோனி, ஷேன் வாட்சன், ஜடேஜா, பியுஷ் சாவ்லா, கரன் சர்மா, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கவலைப்பட வேண்டாம்

கவலைப்பட வேண்டாம்

அதில் ஒரு இடத்தில் தோனி சக பேட்ஸ்மேன் ஒருவர் குறித்து கமெண்ட் அடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. "டிஆர்எஸ் இல்லை.. அதனால் கவலைப்பட வேண்டாம்" என கிண்டல் செய்துள்ளார். பயிற்சியில் டிஆர்எஸ் இல்லை என்பதால் எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் செய்யலாம். அவுட் ஆவதை பற்றி கவலைப்பட வேண்டாம் என கிண்டல் செய்துள்ளார்.

ஜாலியாக தோனி

ஜாலியாக தோனி

இந்த வீடியோவில் தோனி எப்போதும் போல ஜாலியாக கமெண்ட் அடித்துக் கொண்டு கூலாக இருப்பதை சுட்டிக் காட்டி பல ரசிகர்களும் இதை பகிர்ந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் செப்டம்பர் 19 அன்று சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 9, 2020, 18:07 [IST]
Other articles published on Sep 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+