Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டில் 10 வருடத்தை பூர்த்தி செய்த டோணி.. கொண்டாடும் ரசிகர்கள்!

டெல்லி: இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி, இந்திய அணிக்கு கிரிக்கெட் விளையாட வந்து 10 வருடங்களாகி விட்டது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி சிட்டகாங்கில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் முறையாக அறிமுகமானார் டோணி. அப்போது அவருக்கு வயது 23.

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே ஐசிசியின் முக்கியக் கோப்பைகள் அனைத்தையும் வென்ற ஒரே கேப்டன் டோணிதான். அவை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை.

மேலும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் டோணி திகழ்கிறார்.

ரசிகர்களின் தனிப் பாசம்

ரசிகர்களின் தனிப் பாசம்

எப்படி இருப்பினும் இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் முக்கியமானவராக திகழ்கிறார் டோணி என்பதால் ரசிகர்களுக்கு அவர் மீது தனிப்பாசம் இருப்பது உண்மையே.

10 வருடத்திற்கு முன்பு

10 வருடத்திற்கு முன்பு

33 வயதான டோணி 10 வருடங்களுக்கு முன்பு, தனது முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது ரன் ஏதும் எடுக்காத நிலையில் டக் அவுட் ஆனவர். 7வது வீரராக களம் இறங்கிய டோணி, ஒரு பந்தை மட்டுமே சந்தித்து ரன் அவுட் ஆனார்.

பெஸ்ட் பினிஷர்

பெஸ்ட் பினிஷர்

ஆனால் அது அந்தப் போட்டியுடன் போய் விட்டது. அடுத்தடுத்து வந்த போட்டிகளில் பின்னிப் பெடலெடுக்க ஆரம்பித்தார் டோணி. குறிப்பாக ஒரு நாள் போட்டிகள், டுவென்டி 20 போட்டிகளில் சிறந்த பினிஷராக அவதாரம் எடுத்தார். 2011ல் இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார். அதன் மூலம் உலகக் கோப்பையை வென்ற 2வது இந்திய கேப்டனாக, கபில்தேவுக்கு அடுத்த இடத்தைப் பெற்றார்.

இளம் அணியுடன் ஒரு சாதனை

இளம் அணியுடன் ஒரு சாதனை

மேலும் 2007ம் ஆண்டு டுவென்டி உலகக் கோப்பைப் போட்டியில் டோணி தலைமையிலான இளம் இந்திய அணி அசத்தலாக ஆடி கோப்பையையும் கைப்பற்றி நாடு திரு்பியது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் டோணி தலைமையில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

முதலிடம்

முதலிடம்

மேலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான தரி வரிசையில் டோணி தலைமையிலான இந்திய அணி முதல் இடத்தைப் பிடித்தும் சாதனை படைத்தது. இந்தியாவுக்கு 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்து, இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டனாக டோணி திகழ்கிறார். மேலும் 59 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்து சாதனை படைத்துள்ளார்.

13,000 ரன்களுக்கு மேல்

13,000 ரன்களுக்கு மேல்

டோணி இதுவரை 89 டெஸ்ட், 250 ஒரு நாள் போட்டிகள், 50 டுவென்டி 20 போட்டிகளில் ஆடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 13,000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். விக்கெட் கீப்பராக 500 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளார்.

சென்னையின் சூப்பர் கிங்

சென்னையின் சூப்பர் கிங்

இதுதவிர ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வலம் வரும் டோணி அதிலும் தனது முத்திரையைப் பதித்தள்ளார். சென்னை அணி சாம்பியன் பட்டத்தை டோணி தலைமையில் வென்றுள்ளது. மேலும் சாம்பின்ஸ் லீக் டுவென்டி 20 சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இப்படிப்பட்ட டோணி, சர்வதேச கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் டிவிட்டரில் அதைக் கொண்டாடி வருகின்றனர். "10Yearsof DHONIsm" என்று ஹேஷ்டேக் செய்து அதை டிரண்டாக்கியுள்ளனர்.

Story first published: Tuesday, December 23, 2014, 12:46 [IST]
Other articles published on Dec 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+