டோணிக்கு இன்றிரவு கல்யாணம்-கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்பு

டோணியை இணைத்து பலருடன் கிசுகிசுக்கள்சில நாட்கள் முன்பு வரை கொடி கட்டிப் பறந்தன. கடைசியாக நடிகை லட்சுமி ராய் மற்றும் ஆசினுடன் இணைத்து வெகுவாக கிசுகிசுக்கப்பட்டார் டோணி. இந்த நிலையில் திடீரென அவரது பள்ளித் தோழியை மணக்கப் போகிறார் டோணி.
அவரது பெயர் சாக்ஷி சிங் ராவத். இவரது தந்தையும், டோணியின் தந்தையும் ஒரே ஊரில் பணியாற்றியவர்கள். அப்போது ஏற்பட்ட குடும்பப் பழக்கம். டோணியும், ராவத்தும் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். இப்போது வாழ்க்கைத் துணையாகின்றனர்.
ராவத் உ.பியைச் சேர்ந்தவர். நேற்று டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,ஹர்பஜன் சிங், ஆசிஷ் நெஹ்ரா மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.
அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பின்னர் கல்யாணம் நடைபெறும் எனக் கூறப்பட்டது. ஆனால் இன்று இரவே டேராடூனில் திருமணம் நடைபெறவுள்ளது.
இது கிட்டத்தட்ட அவசரக் கல்யாணமாக நடைபெறுகிறது. டேராடூனிலருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து கல்யாணம் நடக்கிறது.
மணமகன் டோணிக்கு 28 வயதாகிறது. மணமகள் சாக்ஷிக்கு 23 வயதாகிறது. ஹோட்டல் மேனெஜ்மென்ட் படித்து வருகிறார்.
கல்யாணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங்க் மனோகர் உள்ளிட்ட சில கிரிக்கெட் பிரபலங்களும் அழைக்கப்பட்டுள்ளனராம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications