WATCH: கடைசி நேர நம்பிக்கையையும் தகர்த்த ரன் ரவுட்.. வேதனையில் கதறி அழுத தோனி
மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் கடைசி வரை போராடி விக்கெட்டை இழந்த தோனி, வேதனை தாளாமல் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது.
உலகமே எதிர்பார்த்த முதலாவது அரையிறுதி நடந்து முடிந்துவிட்டது. நியூசிலாந்தும், இந்தியாவும் மோதிய அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து பைனலுக்குள் நுழைந்துள்ளது. முக்கியமான இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் கோட்டை விட்டு, கோப்பையையும் கோட்டை விட்டிருக்கிறது இந்தியா.
மழை காரணமாக, முந்தைய நாள் ஸ்கோரான 46.1 ஓவர்களில் 211/5 என்ற ரன்களுடன் மீதி ஆட்டத்தை இன்று தொடர்ந்தது நியூசிலாந்து. டெய்லர் 74 ரன்கள் இருக்கும் நிலையில், ஜடேஜாவிடம் ரன் அவுட்டானார். லாதம் 10 ரன்களிலும் ஹென்றி 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 239 ரன்கள் எடுத்தது.

முக்கிய விக். காலி
அடுத்து களமிறங்கிய இந்தியாவில், ரோகித், கோலி, ராகுல் மூவரும் 1 ரன்களில் சொதப்பி ரசிகர்களை புலம்ப வைத்தனர். பண்ட் 32 ரன்கள், கார்த்திக் 6 ரன்கள் எடுத்தனர். பாண்டியா நிலைத்து ஆடி வந்தாலும் 32 ரன்களுக்கு வெளியேறினார்.

கைநழுவிய போட்டி
92 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகள் என்ற போதே ஆட்டம் கைநழுவி போனது. ஆனால், ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்தார் தோனி, சரிவிலிருந்து மீட்டு அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து வந்தார். 7வது விக்கெட்டுக்கு 116 சேர்த்தது இந்த ஜோடி.

துடித்த ரசிகர்கள்
அதிரடியாக ஆடிய ஜடேஜா 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் களத்தில் தல தோனி நிற்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். பின்னர் 50 ரன்களுக்கு தோனி ரன் அவுட் ஆக, ஒட்டுமொத்த ரசிகர்களும் துவண்டு போயினர்.
கதறி, அழுத தோனி
ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக திகழ்ந்த தோனி, கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆகி களத்தில் இருந்து நடந்து பெவிலியன் திரும்பினார். அப்போது, மனம் வெதும்பி, வேதனையில் காணப்பட்ட தோனி, ஒரு கட்டத்தில் அழுதே விட்டார். அவர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய ரசிகர்கள், தோனியின் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் ரசிகர்களும் ஒரு கணம் ஸ்தம்பித்து போயினர்.


Click it and Unblock the Notifications