Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அ..ஆ..இ..ஈ…! ரிஷப் பன்டுக்கு தமிழ் கற்றுத்தரும் ஸிவா தோனி… இணையத்தில் வைரல் வீடியோ

விசாகப்பட்டினம்: தல தோனியின் செல்ல மகள் ஸிவா, இளம் வீரர் ரிஷப் பன்டுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் ஏகத்துக்கும் ஹிட் அடித்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் குவாலியர் 2 போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை சென்னை அணி இறுதிப் போட்டியில் மும்பை அணியை சந்திக்கிறது.

Dhoni daughter ziva teaching tamil to young player rishabh pant, video goes viral

இரு அணிகளின் வீரர்களும் இந்த போட்டிக்காக தயாராகி வருகின்றனர். ரசிகர்களும் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்தநிலையில், தல தோனியின் செல்ல மகள் ஸிவாவின் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

அதாவது.... அந்த வீடியோவில் தோனியின் மகள் ஸிவான நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே டெல்லியின் இளம் வீரர் ரிஷப் பன்ட் உட்கார்ந்து இருக்கிறார். அவருக்கு ஸிவா தமிழ் கற்றுத் தருகிறார். கை, கால்களை அசைத்தவாறு கொஞ்சும் தமிழில் அ, ஆ, இ, ஈ... என்று சொல்லி கொடுக்கிறார்.

ரிஷப் பன்டும், ஸிவா சொல்லிக் கொடுப்பது திரும்ப உச்சரிக்கிறார். அதற்கு ஸிவா விளையாடியபடியே மீண்டும் அ, ஆ, இ என்று சொல்கிறார். இந்த வீடியோவை தோனி தமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது கன்னாபின்னாவென்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Saturday, May 11, 2019, 18:45 [IST]
Other articles published on May 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+