டீமுக்கு என்ன தேவையோ அதைத் தான் தோனி செஞ்சிருக்கிறாரு... தலைக்கு தோள் கொடுத்த கிரிக்கெட் கடவுள்
மும்பை: அணிக்கு என்ன தேவையோ, அதைத் தான் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனி செய்திருக்கிறார் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்தியா, உலக கோப்பை செமி பைனலுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த போட்டியிலும் தோனியின் பேட்டிங் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
உலக கோப்பை தொடரில் தோனியின் ஸ்லோவான பேட்டிங் பற்றி சச்சின் ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்தார். டெண்டுல்கர் விமர்சனம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தோனி குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் முதல் நெட்டிசன்கள் வரை பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தோனி ரசிகர்கள் ஆவேசம்
தோனியின் மீதான விமர்சனத்தால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள், கொந்தளித்தனர். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சேசிங் செய்த இந்திய அணி முதல் 10 ஓவர்களில் எத்தனை டாட் பால்கள் இருந்தன என்பது குறித்து பேசாமல் இருக்கின்றனர் என்று பதிலடி தந்தனர்.

குறைந்த ரன்விகிதம்
அந்த போட்டியில் அசத்தல் பவுலிங், அற்புதமான பேட்டிங் என அழகாக ஆடிய இங்கிலாந்து வெற்றிபெற்றது. பவுண்டரி போகாமல் அவர்கள் செய்த பீல்டிங்கால் இந்திய அணியின் ரன் விகிதம் குறைந்தது.

ஏன் இந்த கேள்வி?
இதை கோலியே ஒப்புக் கொண்டிருக்கிறார், ஆனால் அதை தெரிந்தவர்களே புரியாமல் தோனியை மட்டும் ஏன் விமர்சிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினர். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி இன்னிங்ஸ் பற்றி பேசுபவர்கள்... அந்த இன்னிங்சில் இந்தியாவின் ஒரே சிக்சரை அடித்தது தோனி என்று ஏன் பேச மறுக்கிறார்கள் என்றும் கூறினர்.

சச்சின் ஆதரவு
முதலில் தோனியின் பேட்டிங் குறித்து பேசிய சச்சினும் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டார். அதாவது வங்கதேச போட்டியின் போது அவர், தோனி ஆடிய இன்னிங்ஸ் இந்தியாவுக்கு முக்கியமானது. இந்தியாவுக்கு என்ன தேவையோ அதை தோனி செய்திருக்கிறார் என்றார்.


Click it and Unblock the Notifications