மிஸ்டர் கோலி.. விதி வலியது.. இன்று தோனிக்கு நடப்பது நாளை உங்களுக்கும் நடக்கும்
மும்பை : தோனி டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் தளத்தில் தோனி ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாகவும், தேர்வுக் குழுவிற்கு எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தோனி ரசிகர் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு விதியைக் காட்டி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மிஸ்டர் கோலி, விதி வலியது
தோனியின் ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், "நான் மிஸ்டர்.கோலிக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். விதி வலியது. #தோனி" என கூறி உள்ளார்.

கோலிக்கும் இதே தான்
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். இவரது நீக்கத்திற்கு கோலி தான் காரணம் என பொருள் படும்படி இந்த ரசிகர் தன் பதிவில் கூறி இருக்கிறார். இன்று தோனியை கோலி நீக்கியது போல, சில வருடங்கள் கழித்து கோலியை நீக்குவார்கள் என விதியை சுட்டிக் காட்டி உள்ளார்.

தோனி மூத்த வீரர்களை நீக்கினார்
இந்த ட்வீட்டை ஆதரித்து பலரும் கருத்து கூறி இருந்தாலும், சிலர், தோனியின் கேப்டன் பதவி காலத்தில் தான் கங்குலி, டிராவிட், லக்ஷ்மன், சேவாக் போன்றோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர் அல்லது ஓய்வை அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் எனவும் கூறியுள்ளனர். அதாவது, தோனி மற்ற மூத்த வீரர்களுக்கு செய்தது, இன்று அவருக்கு நடக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.
தோனி ஐபிஎல்-இல் ரன் குவித்தார்
தோனி இந்த ஆண்டில் சர்வதேச போட்டிகளில் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. 2018 ஐபிஎல் தொடரில் தோனி கலக்கினார். இதை அடுத்து அவர் மீண்டும் பார்முக்கு வந்துவிட்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், அவரால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் போனது. ஒருநாள் போட்டிகளில் தோனி சரியாக ஆடாத நிலையில், அவரை டி20 போட்டிகளில் இருந்து நீக்கியது என்ன மாதிரியான முடிவு எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications