எங்க இருந்த "தல".. எப்படி சறுக்கியிருக்கிறார் பாருங்க!
Recommended Video

துபாய்: ஒரு நாள் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையில் முன்னாள் கேப்டன் தோனிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 15வது இடத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தங்களது இடங்களில் அப்படியே உள்ளனர். கோஹ்லி முதலிடத்தில் தொடர்கிறார். துணை கேப்டன் ரோஹித் சர்மா 4வது இடத்திலும், தவன் 10வது இடத்திலும் உள்ளனர்.

15வது இடத்தில் தோனி
சமீபத்திய இங்கிலாந்து தொடரில் சரியாக விளையாடாத காரணத்தால் ஒரு இடம் இறங்கி 15வது இடத்துக்குப் போயுள்ளார் தோனி. இந்தத் தொடரில் தோனியின் பேட்டிங் வழக்கமான அதிரடியாக இல்லை.

சூப்பர் பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஓபனர்கள் பகர் ஜமான், இமான் உல் ஹக் மற்றும் வங்கதேச வீரர் தமிம் இக்பால் ஆகியோர் பெரும் உயர்வு கண்டுள்ளனர். பகர் 8 இடம் மேலேறி 16வது இடத்திற்கு வந்துள்ளார். அதாவது தோனிக்கு அடுத்த இடத்தில் இவர் இருக்கிறார்.

இமான் உல் ஹக்
இமான் உல் ஹக் 164வது இடத்திலிருந்து கிடுகிடுவென முன்னேறி 43வது இடத்திற்கு வந்து விட்டார். ஜிம்பாப்வே தொடரில் பிரமாதமாக ஆடி அசத்தியதால் இந்த உயர்வு கிடைத்துள்ளது.

தோனியை ஓவர் டேக் செய்த தமிம்
தமிம் இக்பால், தோனியைத் தாண்டி வந்து 13வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக ஆடியதால் தோனியை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

முதலிடத்தில் பும்ரா
பந்து வீச்சாளர்கள் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 6, யுஸ்வேந்திர சஹல் 10, அக்சார் படேல் 14 என நீடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications