Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சூழலில் தனது முதல் திரைப்படத்தை தமிழில் இருந்து தொடங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமான கேப்டனாக வலம் வந்தவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அதுவும் எதிர்காலத்தில் எந்தெந்த துறைகள் உச்சத்தில் இருக்கும் என்பதை தெளிவாக கணித்து பணத்தை செலவிட்டு வருகிறார்.

 தோனியின் தொழில்கள்

தோனியின் தொழில்கள்

7 இங்க் ப்ரேவ்ஸ் என்ற பெயரில் தோனிக்கு சொந்தமான பீர் நிறுவனம் இயங்கி வருகிறது. இதே போல கார்ஸ் 24 என வாகன நிறுவனம், ஆடை துறைகளில் பணத்தை போட்டுள்ளார். தோனிக்கு எப்போதுமே இயற்கை விவசாயத்தின் மீது ஈர்ப்பு அதிகம். எனவே கருங்கோழி பண்ணை, விவசாயம் ஆகியவையிலும் முதலீடு செய்துள்ளார். சமீபத்தில் விவசாயத்திற்கு உதவக்கூடிய கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற ட்ரோன் நிறுவனத்திலும் தனது பங்களிப்பை கொடுத்திருந்தார்.

 கோலிவுட் எண்டரி

கோலிவுட் எண்டரி

இந்நிலையில் திரைப்படத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தோனி எண்டர்டெயின்மண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதுவும் சென்னை மீதுள்ள காதலால் தனது முதல் தயாரிப்பை தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதற்கான அறிவிப்பு இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திரைப்பட விவரங்கள்

திரைப்பட விவரங்கள்

அதன்படி ஸ்பெஷல் வீடியோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. Lets Get married ( லெட்ஸ் கெட் மேரிட் ) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லவ் டுடே திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இவானா, கதாநாயகியாக நடிக்க தேர்வாகியுள்ளார். நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே தோனியை வைத்து அதர்வா என்ற நாவல் என்ற கிராபிக் நாவலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் ப்ளான்

மாஸ்டர் ப்ளான்

தோனி தனது முதல் திரைப்படத்தை பெரிய நடிகர், நடிகைகளுடன் தொடங்குவார் என்று தான் தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கேற்றார் போலவே நடிகர் விஜய்யுடன் சந்திப்பு நடைபெற்றது. இதே போல நயன்தாராவை நாயகியாக வைத்து புதிய படம் உருவாகும் எனக்கூறப்பட்டது. ஆனால் அதற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படும் என்பதால் சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

இந்தாண்டு முதல் முழு நேர தொழிலதிபாராக எம்.எஸ்.தோனி உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஐபிஎல் 16வது சீசன் போட்டிகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இந்த முறை தோனியின் ஆசைக்கு ஏற்றார் போலவே சென்னையிலும் போட்டிகள் நடக்கின்றன. எனவே இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, January 27, 2023, 13:09 [IST]
Other articles published on Jan 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+