Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்காவை அதிர வைத்த தோனி குரல்..!! நாங்க இருக்கோம்.. மிஸ் யூ தோனி..! ரசிகர்கள் செம கெத்து

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி இல்லாத நிலையிலும், அவரது ரசிகர்கள் இந்திய அணியின் ஆட்டத்தை கண்டு தோனிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2வது டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 67 ரன்களை அடித்தார். தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் குவித்திருந்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அப்போது மழை விளையாட, இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த தொடரில் இருந்து விலகிய தோனி தற்போது ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தோனி ரசிகர்கள்

தோனி ரசிகர்கள்

அவர் இல்லாத இந்த தொடரை தோனி ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் எதிர் கொண்டு வருகின்றனர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது... எப்படியாவது தல தோனியை அணியை விட்டே துரத்த வேண்டும் என்று அவருக்கு அளித்த நெருக்கடி அப்படி என்று கூறுகின்றனர் அவரது ரசிகர்கள்.

ரசிகர்கள் ஆதரவு

தோனி இந்த தொடரில் இல்லை என்றாலும் இந்திய அணி கலந்து கொள்ளும் போட்டிகளில் தவறாமல் அவரது ரசிகர்கள் வருகையை பதிவு செய்து விடுகின்றனர். இந்திய அணியை உற்சாகப்படுத்தும் அவர்கள், தோனியையும் ஞாபகப்படுத்தி வருகின்றனர்.

மிஸ் யூ தோனி

அதன்படி அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த போட்டியில் தல தோனி ரசிகர்கள் அவரது கைப்படத்தை ஏந்தியபடி மிஸ் யூ தோனி என்று நின்று கொண்டிருந்தனர். அதன் மூலம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தோனி ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாகப்படுத்துவார்கள் என்பதை காண முடிந்தது.

Story first published: Monday, August 5, 2019, 20:03 [IST]
Other articles published on Aug 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+