For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சுயநலவாதி”.. தோனி - கங்குலி பிறந்தநாள்.. ஹர்பஜன் சிங்கை வெளுத்து வாங்கும் ரசிகர்கள் - காரணம் என்ன?

மும்பை: கங்குலி - தோனி பிறந்தநாளன்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் செய்த காரியம் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-ன் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. இவரின் துணிச்சலுக்காகவே இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

ஹர்பஜன் சிங் வாழ்த்து

ஹர்பஜன் சிங் வாழ்த்து

இன்று அவரின் பிறந்தநாளையொட்டி வீரர்கள் பிசிசிஐ, ஐசிசி என்ற அமைப்புகள் மட்டுமல்லாது வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறிய வாழ்த்துதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோபத்தில் ரசிகர்கள்

கோபத்தில் ரசிகர்கள்

இந்திய அணியின் மற்றொரு முக்கிய கேப்டனான எம்.எஸ்.தோனியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு இந்திய அணியின் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் ஹர்பஜன் சிங் ஒரு வாழ்த்து செய்தியை கூட பதிவிடவில்லை. தோனியின் கேப்டன்சியில் பல்வேறு போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் அவரை மட்டும் எப்படி மறக்க முடிகிறது என ரசிகர்கள் கடும் கோபத்தில் சாடி வருகின்றனர்.

கங்குலி நட்பு

கங்குலி நட்பு

2000ம் ஆண்டில் கங்குலி கேப்டனாக பதவியேற்ற பின்பு சீனியர் வீரர்கள் ஓரம்கட்டப்பட்டு பல்வேறு இளம் வீரர்கள் ஜொலிக்க தொடங்கினர். ஜாகீர்கான், எம்.எஸ்.தோனி, யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், அடங்கிய அந்த பட்டியலில் ஹர்பஜன் சிங்-ம் முக்கியமானவர். ஹர்பஜனுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் உதவியாக இருந்தவர் கங்குலி. இதன் காரணமாகவே தனது கேப்டன் கங்குலி என்று அவர் வாழ்த்து கூறியுள்ளார்.

Recommended Video

T20 World Cup-ல் Opening களமிறங்க திட்டம் போட்ட Virat Kohli.. எச்சரிக்கும் Aakash Chopra
சுயநலம்

சுயநலம்

கடந்த 2 ஆண்டுகளாக தோனி தலைமையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் , அந்த சமயத்தில் தோனி குறித்து அடிக்கடி புகழ்ந்து பதிவுகளை போட்டு வந்தார். ஆனால் இந்த ஐபிஎல்-ல் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதால், ஹர்பஜன் சிங் அதிருப்தியில் இருப்பதாகவும், தனது தேவைக்காக மட்டும் வாழ்த்துகளை கூறி வருவதாகவும் தோனியின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Thursday, July 8, 2021, 20:21 [IST]
Other articles published on Jul 8, 2021
English summary
Dhoni Fans Trolling Harbajan Singh after he Wishes only for Ganguly's Birthday
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+