Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் உயிர்பெற்ற சுஷாந்த் சிங் சர்ச்சை.. தோனி தான் காரணம்.. பாலிவுட்டிற்கு எதிராக குரல்.. எப்படி?

மும்பை: எம்.எஸ்.தோனியால் மீண்டும் சுஷாந்த் சிங் ராஜ்புத் குறித்த சர்ச்சைகள் உயிர் பெற்றுள்ளன.

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நாட்டையே உலுக்கிய செய்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தான்.

2 ஆண்டுகளை தாண்டிய போதும் அவரின் மரணத்திற்கான நீதியை ரசிகர்கள் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் ராஜ்புத்

பாலிவுட்டில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், நாடு முழுவதும் புகழ்பெறுவதற்கு காரணமாக இருந்தது 'எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் தான். தோனியை போலவே அச்சு அசலாக உடல்மொழி, வசனம் என படத்தில் வாழ்ந்திருந்தார் சுஷாந்த் சிங்.

தோனியுடனான நட்பு

தோனியுடனான நட்பு

ஒருபுறம் சுஷாந்த் சிங்கின் குணம், மற்றொருபுறம் தோனி ரசிகர்களின் ஆதரவு என இந்தியாவில் பிரபலமான நடிகராக உருவெடுத்திருந்தார். இதே போல தோனியுடனும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கு சென்று வந்ததால் முக்கிய பிரமூகரானார்.

6ம் ஆண்டு

6ம் ஆண்டு

இந்நிலையில் அந்த எம்.எஸ்.தோனி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து சுஷாந்த் சிங்கின் நடிப்பு திறமை குறித்தும், இந்தியாவின் சிறந்த பயோபிக் திரைப்படம் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் தியேட்டர்களில் அத்திரைப்படத்தின் காட்சிகள் வருவது போன்ற வீடியோக்களும் ட்ரெண்டாக்கப்பட்டு வருகின்றன.

ரசிகர்கள் போர்க்கொடி

ரசிகர்கள் போர்க்கொடி

இதுஒருபுறம் இருக்க, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டமும் இணையத்தில் வெடித்துள்ளது. ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் இருந்த வந்த அழுத்தம் தான் அவரின் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு உள்ள நிலையில், பாலிவுட்டை இனி ஒதுக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Friday, September 30, 2022, 19:17 [IST]
Other articles published on Sep 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+