Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அடிச்சு சொல்றோம்.. சிஎஸ்கே பிளே ஆஃப் போகும்” தீவிரமாக முட்டுக்கொடுக்கும் தோனி ரசிகர்கள்!

சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் ஆறு தோல்விகளைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு மிகவும் சிக்கலானதாக உள்ளது. மேலும், அந்த அணியில் சரி செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல் மிகவும் நீளமாக உள்ளது.

பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து விதங்களிலும் சிஎஸ்கே அணி மிகவும் பின்தங்கி உள்ளது. சரியான வீரர்களும், அணியில் சமநிலையும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மேஜிக் செய்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணியை அழைத்துச் சென்று விடுவார் எனத் தீவிரமான தோனி ரசிகர்கள் நம்பி வருகின்றனர்.

IPL 2025 IPL Chennai Super Kings MS Dhoni

அதற்கு பல்வேறு முட்டுக் கொடுக்கும் காரணங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 2010ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வென்றிருந்தது. அந்த ஆண்டு சிஎஸ்கே அணி விளையாடிய முதல் 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்தது.

அதன் பின்னர் அந்த அணி அதிரடியாகப் பல வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதைச் சுட்டிக்காட்டி, அதேபோல் 2025 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்கின்றனர்.

அதேபோல, கடந்த ஆண்டு (2024) ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று இருந்தது. அதன் பின்னர் வரிசையாக வெற்றிகளைக் குவித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேறியிருந்தது. இந்த உதாரணத்தையும் சுட்டிக்காட்டி, இதே போல சிஎஸ்கே அணி இந்த ஆண்டு முன்னேறிவிடும் என முட்டுக் கொடுத்து வருகின்றனர் தோனி ரசிகர்கள்.

ஆனால், கேப்டன் தோனியோ, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, "இந்த ஆண்டு அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல முயற்சிப்போம். இல்லை எனில், அடுத்த ஆண்டுக்கான சரியான வீரர்கள் யார் என்பதை அடையாளம் காண முயற்சி செய்வோம்" என்று கூறி இருக்கிறார். அதாவது, தோனி இப்போதே அடுத்த ஆண்டுக்கான தயாரிப்புகளைச் செய்யத் துவங்கி விட்டார்.

அந்த அளவுக்குத் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை உள்ளது. இதை கூட புரிந்து கொள்ளாமல் இன்னும் ரசிகர்கள் தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் முட்டுக் கொடுத்து வருகிறார்கள். இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட சிஎஸ்கே அணியின் 2025 ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்துவிடும். தோனி ரசிகர்கள் நம்பிக்கை நிறைவேறுமா? பொய்க்குமா? என பார்க்கலாம்.

Story first published: Tuesday, April 22, 2025, 14:00 [IST]
Other articles published on Apr 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+