For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியே வேண்டாம்னு சொன்னாலும் விட மாட்டோம்.. செஞ்சே தீருவோம்.. அடம்பிடிக்கும் பிசிசிஐ.. கசிந்த தகவல்!

மும்பை : தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Recommended Video

Dhoni Retirementக்கு பிறகும் வரப்போகும் வருமானம் | Oneindia Tamil

இந்த நிலையில், பிசிசிஐ அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தோனி எப்படியும் போட்டியில் ஆட ஒப்புக் கொள்ள மாட்டார் என்றே கருதப்படும் நிலையில், அதற்கு மற்றொரு ஏற்பாட்டையும் செய்து வைத்துள்ளது பிசிசிஐ.

தோனி நிலை

தோனி நிலை

தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட்டை விட்டே விலகி இருந்தார். எந்த சர்வதேச, உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவர் ஓய்வை அறிவிக்க உள்ளதாக அடிக்கடி வதந்திகள் கிளம்பி வந்தன. இடையே அவர் 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட விரும்புவதாக கூறப்பட்டது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்திய அணியில் மீண்டும் இடம் பெற தோனி ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட வேண்டும் என விமர்சகர்கள் கூறி வந்தனர். அதற்கேற்ப தோனி தீவிர பயிற்சியில் இறங்கினார். மார்ச் மாதம் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்திய பயிற்சி முகாமில் அவரது அதிரடி பேட்டிங்கை கண்டு ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தோனியின் திட்டம் சாத்தியமாகவில்லை. டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டது. ஐபிஎல் தொடரும் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இனி தோனி இந்திய அணியில் இடம் பெற முடியாது என கூறப்பட்டு வந்தது.

சென்னையில் ஓய்வு அறிவிப்பு

சென்னையில் ஓய்வு அறிவிப்பு

இதற்கிடையே 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதாக அறிவித்தது பிசிசிஐ. அதற்கான சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க தோனி சென்னை வந்தார்வந்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார்.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

டோனியின் ஓய்வு முடிவை கண்டு உணர்ச்சிவசப்பட்ட பல ரசிகர்கள் அவரை கடைசியாக இந்திய அணியில் ஆடி பார்க்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்ககையை முன் வைத்தனர். தோனியை வழியனுப்பும் வகையில் ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என கோரினர்.

போட்டி சாத்தியமா?

போட்டி சாத்தியமா?

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் தொடரையே வெளிநாட்டில் நடத்தும் நிலையில் இந்தியாவில் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த முடியுமா? அப்படியே நடத்தினாலும் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடத்துவதால் என்ன பயன்? என்ற கேள்விகள் எழுந்தன.

பிசிசிஐ முடிவு என்ன?

பிசிசிஐ முடிவு என்ன?

இது குறித்து பிசிசிஐ எடுத்துள்ள முடிவு பற்றி தகவல் கசிந்துள்ளது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது சர்வதேச தொடர் ஏதுமில்லை. ஐபிஎல் முடிந்த உடன் அந்த போட்டியை நடத்துவது குறித்து நாங்கள் முடிவு செய்வோம். அவருக்கு நிச்சயம் நாம் மரியாதை செய்ய வேண்டும். ஆனால், அவர் வித்தியாசமான வீரர். திடீரென ஓய்வை அறிவித்து விட்டார் என்றார்.

ஐபிஎல்-இன் போது..

ஐபிஎல்-இன் போது..

இதுவரை அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்தும் முடிவு குறித்து அவரிடம் பேசவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரின் போது ஃபேர்வெல் போட்டி அல்லது தொடர் பற்றி அவரிடம் பேசி விட்டு முடிவு செய்வோம என்றார் அந்த பிசிசிஐ அதிகாரி.

பாராட்டு விழா

பாராட்டு விழா

தோனி ஒப்புக் கொண்டாலும், மறுத்தாலும் சரியான முறையில் அவருக்கு பாராட்டு விழா நடத்துவோம். அவருக்கு பாராட்டு விழா நடத்துவது பிசிசிஐக்கு கிடைத்த பெருமை என்றும் குறிப்பிட்டார் அந்த அதிகாரி. ஐபிஎல் தொடரின் போது பாராட்டு விழா நடக்குமா?

Story first published: Thursday, August 20, 2020, 12:27 [IST]
Other articles published on Aug 20, 2020
English summary
Dhoni farewell match : BCCI planning to arrange a farewell match for Dhoni after IPL 2020. There will be a felicitation ceremony, even if Dhoni don’t agree.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+