Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனி படத்தை பகிர்ந்த WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. என்ன காரணம்

டெல்லி: பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனியிடன் படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜான் சீனாவின் இந்த பதிவு உடனடியாக இணையத்தில் வைரலானது.

சிஎஸ்கே கேப்டன் தல தோனிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே தனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள போதிலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரிலும் அணியின் ஆலோசகராக தோனி சேர்க்கப்பட்டிருந்தார்.

 ஜான் சீனா பகிர்ந்த படம்

ஜான் சீனா பகிர்ந்த படம்

இந்நிலையில், பிரபல WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனியிடன் படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தோனி யாருடனோ கைகுலுக்குவதைப் போல இருக்கும் இந்த படம் இணையத்தில் உடனடியாக வைரலானது. தோனியின் படத்தைப் பதிவிட்டிருந்த ஜான் சீனா அது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் நெட்டிசன்கள் வழக்கம் போல வைத்து செய்யத் தொடங்கினர்.

 கலாய்க்கும் நெட்டிசன்கள்

கலாய்க்கும் நெட்டிசன்கள்

குறிப்பாக, ஜான் சீனாவின் பிரபல வசனமான "You Can't See Me" என்ற வசனத்தை வைத்து நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கினர். அதாவது ஜான் சீனாவும் தோனியும் தான் கை கொடுத்துக் கொள்கிறார்கள். அதைத்தாண்டி இதில் எதுவும் இல்லை எனப் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சில இரண்டு ஜாம்பவான்கள் ஒரே படத்தில் என்ற ரீதியிலும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

அதேபோல ஜான் சீனா இந்திய பிரபலம் ஒருவரின் படத்தைப் பகிர்வது இது முதல்முறை இல்லை. அவர் ஏற்கனவே, பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோரின் படங்களைப் பகிர்ந்துள்ளார். பிரபல WWE மல்யுத்த வீரரான ஜான் சீனா, பல ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 ஜான் சீனா

ஜான் சீனா

ஜான் சீனா இந்த ஆண்டு நடைபெற்ற மனி இன் பேங்க் 2021 சமயத்தில் WWE-க்கு திரும்பினார். அதைத் தொடர்ந்து சம்மர் ஸ்லாமில் ரோமன் ரெய்ன்ஸுக்கு எதிரான போட்டியில் அவரால் யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பை வெல்ல முடியவில்லை. அதேபோல ப்ரோக் லெஸ்னருக்கு எதிரான போட்டியிலும் ஜான் சீனா தோற்கடிக்கப்பட்டார்.

தோனி

தோனி

மறுபுறம் தல தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகப் பட்டம் வென்றது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையிலான அணிக்கு வழிகாட்டியாக இருந்தார்.

 கடைசி போட்டி எங்கே

கடைசி போட்டி எங்கே

அதேபோல தல தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுடன் ஓய்வு பெற உள்ளதாகவும் இணையத்தில் பல்வேறு கதைகள் பரவின. இருப்பினும், அந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்த தோனி, தனது கடைசி போட்டி நிச்சயம் சென்னையில் தான் இருக்கும் எனக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறும் நிலையில், தோனியை சிஎஸ்கே தக்க வைப்பது உறுதியாகியுள்ளது. 40 வயதாகும் தோனி ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக உள்ளார்.

Story first published: Thursday, November 25, 2021, 20:15 [IST]
Other articles published on Nov 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+