தோனி இராணுவ முத்திரை கிளவுஸ்.. இப்ப யார்கிட்ட இருக்கு தெரியுமா? காட்டிக் கொடுத்த வைரல் வீடியோ!
டெல்லி : 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் தோனி இராணுவ முத்திரை கொண்ட கிளவுஸை பயன்படுத்தினார்.
அப்போது அதை விதிப்படி பயன்படுத்தக் கூடாது என ஐசிசி தடை விதித்தது. அப்போது அது பெரும் சர்ச்சையாக மாறியது.
தோனி பின் அந்த கிளவுஸை அணியவில்லை. அத்துடன் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

யாரிடம் கொடுத்தார்?
அதன் பின் அந்த கிளவுஸை தோனி இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவரிடம் கொடுத்துள்ளார் என ஒரு வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. அந்த மூத்த வீரர் ஷிகர் தவான். ஆம், அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ ஒன்றில் அந்த கிளவுஸ் இடம் பெற்றுள்ளது.

தவான் வீடியோ
ஷிகர் தவான் ஹிந்தி பாடல்களுக்கு ஆடும் வேடிக்கையான வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இரண்டு நாய்களுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அதை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார் அவர்.
அந்த கிளவுஸ்
அந்த வீடியோவில் பின்னணியில் அவரது கிரிக்கெட் பேட் மற்றும் அவர் வாங்கிய விருதுகள் இடம் பெற்று இருந்தது. ஒரு இடத்தில் தோனியின் கிளவுஸ் இடம் பெற்று இருந்தது. அது தோனியின் கிளவுஸ் என்பதை சில ரசிகர்கள் அடையாளம் கண்டு அதைப் பற்றி குறிப்பிட்டு இருந்தனர்.

ராகுல், பாண்டியா
தவானின் நடனமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து இருந்தது. இந்திய அணி வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா அவரது வீடியோவை கண்டு சிரிக்கும் ஈமோஜிக்களை பகிர்ந்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications