Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி எங்களுக்கு சுதந்திரம் கொடுப்பார்.. ஆனா கோலி..? இப்படி சொல்லலாமா குல்தீப்..?

லண்டன்:கோலியை விட, தல தோனி தான் எங்களை சுதந்திரமாக செயல்பட விடுவார் என்று பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியிருக்கிறார்.

இந்தியாவுக்கான உலக கோப்பை கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய 2 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். 2017ம் ஆண்டு முதல் இந்த இரு வீரர்களும் இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

Dhoni gives freedom, kohli gives confidence says kuldeep yadav

இந்திய அணியில் நானும், சஹாலும் இனைந்து மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி எதிரணியினரின் விக்கெட்களை வீழ்த்துவோம் என்று சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்திருந்தார்.அவர் மேலும் கூறியதாவது:

கோலியின் தலைமையில் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கண்டிப்பாக இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையை வெல்லும். நான் பந்து வீசும் போது, பீல்டிங் செட் செய்வதில் சந்தேகம் வந்தால், தோனியை பார்ப்பேன்.

உடனே, அவர் தானாகவே முன் வந்து பீல்டிங் செட் செய்வதில் எனக்கு உதவி செய்வார். அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு சரியான பதில் தோனியிடம் இருக்கும். எதிரணி பேட்ஸ்மேன்களின் உடல் அசைவை வைத்தே எப்படி பவுலிங் பண்ண வேண்டும் என்பதை கணிப்பார்.

தோனி, கோலி இருவருமே இந்திய அணியின் முதுகெலும்பு. வீரர்களை சுதந்திரமாக செயல்பட தோனி விடுவார். ஆனால் கோலி வீரர்களின் தன்னம்பிக்கை அளவை அதிகரித்து உற்சாகப்படுத்துவார் என்றார்.

Story first published: Tuesday, May 28, 2019, 15:03 [IST]
Other articles published on May 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+