ஆஹா.. பைக்குல போறது யாரு.. அப்பா முதுகுடன் ஒட்டிக் கொண்டு ஹேப்பி ரைட் போன ஜிவா
ராஞ்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனிக்கு அவரது மகள்தான் உலகமே.. அப்படி ஒரு பாசப் பறவைகள் இந்த அப்பாவும் பொண்ணும். கிடைக்கிற கேப்பில் எல்லாம் மகளை குஷிப்படுத்தி விடுவார் இந்த அப்பா தோனி.
Recommended Video
கேப்டன் தோனி எப்படி சூப்பராக தனது பணியைச் செய்வாரோ, விக்கெட் கீப்பர் தோனி எப்படி அருமையாக செயல்படுவாரோ அதே போலத்தான் இந்த அப்பா தோனியும். தனது மகளுக்கு சூப்பர் அப்பாவாக செயல்படுவதோடு மனைவிக்கும் உரிய நேரத்தை ஒதுக்கி ஒரு சிறந்த குடும்பஸ்தராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது லாக்டவுன் சமயம் என்பதால் ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் தோனி குடும்பம் பொழுதைக் கழித்து வருகிறது. இதில் அப்பாவும் பொண்ணும் சேர்ந்து ஒரே அலப்பறைதான்.

அப்பாவும் பொண்ணும் அலப்பறை
சமீபத்தில் அப்பாவும் பொண்ணும் சேர்ந்து ஜீப்பைத் துடைத்துக் கழுவி விட்டனர். அப்பாவுக்குத் துணையா ஜிவாவும் ஜீப்பைத் துடைத்து உதவினார். அந்த வீடியோவை தோனி தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தார். அதேபோல சமீபத்தில் தனது வீட்டு லான் பகுதியில் கிடந்த குப்பைகளை ஜிவா வந்து எடுத்து போட்ட வீடியோவையும் அனைவரும் பார்த்தனர்.

மகளுடன் பைக் ரைடு
இந்த நிலையில் தற்போது தனது அப்பாவுடன் வீட்டுக்குள்ளேயே பைக் ரைட் போயுள்ளார் ஜிவா. இந்தக் காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் லைவ் செய்துள்ளார் சாக்ஷி சிங் தோனி. புல்வெளியைக் காட்டியபடி வரும் அவர் இங்கு இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டுள்ளன அதைப் பாருங்க என்று கூறுகிறார். யார் அந்த கிட்ஸ் என்று பார்த்தால் பைக்கில் வருகிறார் தோனி.. பின்னாடியே அப்பா முதுகை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் ஜிவா.

சாக்ஷி சிங் போட்ட வீடியோ
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனி ஒரு பைக் பிரியர். விதம் விதமான பைக்குகளை ஓட்டுவதில் ஆர்வம் காட்டக் கூடியவர். எந்த ஊருக்குப் போனாலும் பைக் ரைடு போகாமல் திரும்ப மாட்டார். அவரும் யுவராஜ் சிங்கும் ஒரு காலத்தில் ஜோடி போட்டு பைக் சவாரி போவது வழக்கம். இந்த நிலையில் தற்போது தனது வீட்டு வளாகத்திலேயே பைக் சவாரி போயுள்ளார் தோனி.

மனைவியின் ரொமான்ஸ்
இப்படி மகளுடனேயே பொழுதைப் போக்கினால் எனக்கு எப்ப டைம் ஒதுக்குவீங்க என்று சாக்ஷி தோனியின் மைன்ட் வாய்ஸ் கேட்காமல் இருக்குமா.. ஆனால் அவரும் சும்மா இல்லை. தன்னிடம் பேசி பொழுதைப் போக்காமல் போனை நோண்டிக் கொண்டிருந்த கணவரை கால் விரலை கடித்து அவரை சீண்டிய போட்டோ நேற்று வைரலானது.. இதெல்லாம் வேற லெவல் ரொமான்ஸ் என்று ரசிகர்களும் கலாய்த்துத் தள்ளி விட்டனர்.


Click it and Unblock the Notifications