Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிரான போட்டியில் தோனி அணிய உள்ளது இந்த கிளவுஸ் தான்..? வெளியான புதிய தகவல்

Recommended Video

சர்ச்சைக்கு பிறகு தோனி இன்று அணிய போகும் கிளவுஸ் எது ?

லண்டன்:ஆஸி.க்கு எதிரான முக்கிய போட்டியில், தல தோனி பச்சை வண்ண கிளவுசை அணிந்து விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கோப்பையில், சவுதாம்ப்டன் நகரில் கடந்த 5-ம் தேதி இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதின. அப்போது, தல தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுசில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் முத்திரையை கையுறையில் அணிந்திருந்தார். அதை பற்றிய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகின.

இந்த முத்திரையின் அர்த்தம் தியாகம் என்பதாகும். பலிதான் முத்திரையை அணிய துணை ராணுவ கமாண்டோக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இருப்பினும் 2011ம் ஆண்டு தோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டதால் அவர் இந்த முத்திரையை பயன் படுத்தலாம்.

சர்ச்சையான விவகாரம்

சர்ச்சையான விவகாரம்

அந்த முத்திரை பதித்த கிளவுசை பார்த்த தோனியின் ரசிகர்கள், அவரது தேசப்பற்றைப் புகழ்ந்து, பாராட்டி தள்ள விவகாரம் பற்றி கொண்டது. பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. ஆனால், உலகக்கோப்பை போட்டியில் ஒருநாட்டின் ராணுவ முத்திரையை பதித்து விளையாடுவதை ஐசிசி விரும்பவில்லை. உடனடியாக தோனியின் கிளவுசில் இருக்கும் முத்திரையை நீக்குமாறு பிசிசிஐ அமைப்புக்கும், தோனிக்கும் அறிவுரை வழங்கியது.

ஐசிசிக்கு கண்டனம்

ஐசிசிக்கு கண்டனம்

பிசிசிஐ விளக்கத்தை ஐசிசி ஏற்கவில்லை. உடனடியாக தோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த சமயத்தில் ஐசிசியின் செயல் பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. ஒரு படி மேலே, போட்டியை நடத்துவதோடு ஐசிசி தமது வேலையை நிறுத்திக் கொள்ளட்டும் என்று கவுதம் கம்பீர் விமர்சித்தார்.

நடக்கப் போவது என்ன?

நடக்கப் போவது என்ன?

விவகாரம் முற்றிய நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனி என்ன விதமான கிளவுசை அணிந்து வருவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வலைப்பயிற்சியில் தோனி

வலைப்பயிற்சியில் தோனி

வலைப்பயிற்சியின் போது தோனி வைத்திருந்த கிளவுஸ்கள் குறித்து தகவல்கள் கசிந்தன. அதாவது பயிற்சி மேற்கொண்டிருந்த போது பச்சை வண்ண கிளவுசை தோனி வைத்திருந்தார் என்றும், அதை தான் போட்டியின் போது பயன்படுத்துவார் என்றும் அதை நேரில் பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால், அந்த கிளவுசில் ராணுவ முத்திரை இருப்பது போன்று தெரியவில்லை என்றும் கூறினர்.

சர்ச்சைகள் வேண்டாம்

சர்ச்சைகள் வேண்டாம்

போட்டியை போன்றே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த விவகாரத்தில், மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, பலிதான் முத்திரை இல்லாத கிளவுசை தான் தோனி பயன்படுத்துவார் என்று லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படி இருந்தாலும்... பெரும்பாலும் சர்ச்சைகளை விரும்பாதவர் தோனி என்பதால், கிளவுஸ் விவகாரத்தில் அவர் அதிக அக்கறை காட்ட மாட்டார் என்றே தெரிகிறது.

Story first published: Sunday, June 9, 2019, 15:58 [IST]
Other articles published on Jun 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+