Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யகுமார் கேட்ச்சை மிஸ் செய்த முரளி விஜய்.. கோபத்தில் கத்திய தோனி..! வைரல் வீடியோ

சூர்யகுமார் கேட்ச்சை மிஸ் செய்த முரளி விஜய்.. கோபத்தில் கத்திய தோனி..! வைரல் வீடியோ

சென்னை: மும்பை அணிக்கு எதிரான பிளே ஆப் சுற்றில், முரளி விஜய் ஒரு கேட்ச்சை தவற விட்டதால் தோனி கோபமாக பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Dhoni got angry on murali vijay goes viral, when he misses suryakumar yadav catch

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து பிளே ஆப் சுற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் முதல், இரண்டு இடங்களில் பிடித்த மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

Dhoni got angry on murali vijay goes viral, when he misses suryakumar yadav catch

தோனி மற்றும் அம்பத்தி ராயுடு கூட்டணி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டு ஓரளவு ரன் ரேட்டை உயர்த்தினர். இதனை அடுத்து பேட் செய்த மும்பை அணி 18.3 ஓவர்களின் முடிவில் 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு நேரிடையாக முன்னேறியது.

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 71 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் போட்டியின் 5வது ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்திருக்க வேண்டும். அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் ரன் அடிக்க முயற்சி செய்வார்.

அப்போது அவர் கொடுத்த கேட்சை பிடிக்க முரளி விஜய் தவறவிட்டார். அதை கண்டு, கடுப்பான தோனி, முரளி விஜய்யை முறைத்து பார்த்து, கோபமாக களத்தில் கத்துவார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இதே போல் வாட்சனும் அந்த போட்டியில் ஒரு கேட்ச்சை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 8, 2019, 13:51 [IST]
Other articles published on May 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+