For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா இந்த சூப்பர் லேடி? தோனி மீது பாய்ந்த ரசிகர்கள்.. பாதுகாப்பாக கூட்டிச் சென்ற பெண்!

Recommended Video

Dhoni’s hairstylist Sapna Bhavnani turns into his bodyguard

மும்பை : தோனியை நூற்றுக்கணக்கான ரசிகர்களிடம் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற பாதுகாவலர்கள் வரிசையில் முன்னணியில் சென்றார் ஒரு பெண்.

தோனி பல மாதங்களாக கிரிக்கெட் ஆடாமல் இருந்தாலும் அவர் மீதான மோகம் ரசிகர்களுக்கு குறையவில்லை.

மும்பையில் ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது தோனி ரசிகர்களின் மத்தியில் சிக்கிய பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் ஆடவில்லை. அவர் தற்காலிக ஓய்வில் இருப்பதாக தெரிகிறது. அவர் மீண்டும் இந்திய அணியில் ஆடுவாரா? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தும் அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

ஆனாலும், தோனி ரசிகர்கள் அவர் மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவார் என ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இன்னும் சமூக வலைதளங்கள் தோனி ரசிகர்களின் கையில் தான் உள்ளது. அவரைப் பற்றிய ஒவ்வொரு தகவலும் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

விளம்பர படப்பிடிப்பு

விளம்பர படப்பிடிப்பு

சமீபத்தில் மும்பையில் விளம்பரப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார் தோனி. மும்பையின் தானே பகுதியில் அந்த படப்பிடிப்பு நடந்தது. வெளிப்புறத்தில் நடந்த இந்த படப்பிடிப்பால் வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

பரவிய தகவல்

பரவிய தகவல்

சிறிது நேரத்தில் தோனி, தானே பகுதியில் இருக்கும் தகவல் மும்பை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வேகமாக பரவியது. இதையடுத்து படப்பிடிப்பு நடந்த இடத்தை சுற்றி ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். தோனியின் பாதுகாப்பு கேள்விக் குறியானது.

குவிந்த பாதுகாவலர்கள்

குவிந்த பாதுகாவலர்கள்

அதே சமயம், பாதுகாவலர்கள் பலர் ரசிகர்களை கட்டுப்படுத்தினர். தடுப்புகள் போடப்பட்டும், அதை ரசிகர்கள் சற்றும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஒரு கட்டத்தில் பாதுகாவலர்கள் தோனியை சுற்றி வளைத்து பாதுகாப்பாக அந்த இடத்தை விட்டு அழைத்துச் சென்றனர்.

முன்னே சென்ற அந்த பெண்

முன்னே சென்ற அந்த பெண்

அப்போது ஒரு ஸ்டைலான பெண் தோனிக்கு முன்னே கைகளை விரித்து ரசிகர்கள், தோனி அருகே வராதபடி பார்த்துக் கொண்டு முன்னேறி சென்றார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அவர் பெயர் சப்னா பவ்னானி. தோனி ரசிகர்கள் பலருக்கு அவரைக் குறித்து நிச்சயம் தெரியும்.

யார் இந்த சப்னா பாவ்னானி?

யார் இந்த சப்னா பாவ்னானி?

சப்னா பாவ்னானி தான் தோனியின் ஹேர் ஸ்டைலிஸ்ட். தோனி விளம்பரப் படங்களில் நடிக்கும் போது அவரும் அந்த இடத்தில் இருப்பார். அவர் தோனியின் தீவிர ரசிகை என்றே தன்னை பல முறை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவர் தான் தோனி முன் பாதுகாவலர்களில் ஒருவராக மாறினார்.

வைரல் வீடியோ

அவர் இன்ஸ்டாகிராமில் தோனி முன் பாதுகாப்பு அரணாக நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் "90 சதவீதம் பாதுகாப்பு. 10 சதவீதம் ஹேர். 500 சதவீதம் ரசிகை" எனக் குறிப்பிட்டு தோனி மீதான தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஐபிஎல்-இல் தோனி

ஐபிஎல்-இல் தோனி

தோனி ரசிகர்களின் மோகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குறையாது என்பதற்கு இந்த ஒரு சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. அவர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் தோனி விரைவில் ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் கலக்க வருகிறார்.

ஒரு மாத பயிற்சி

ஒரு மாத பயிற்சி

மார்ச் 1 முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார் தோனி. சில நாட்கள் தவிர்த்து அந்த மாதம் முழுவதும் பயிற்சியில் ஈடுபட உள்ளார் தோனி. ரசிகர்கள் தோனியைக் காண ஆவலாக உள்ளனர்.

Story first published: Friday, April 17, 2020, 20:51 [IST]
Other articles published on Apr 17, 2020
English summary
Dhoni got mobbed by hundereds of fans in Thane, Mumbai. But he was safely escorted by his hair stylist Sapna Bhavnani.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+