டோணி தலைமையில் உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸி.யிடம் தோற்றதே இல்லை பாஸ்!
டெல்லி: இந்தியாவுக்கு எதிராக உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா புள்ளி விவர அடிப்படையில், புலியாக இருந்தாலும் கூட கேப்டன் டோணிக்கு எதிரான ஆஸ்திரேலியா கதை நமக்கு சாதமாகத்தான் உள்ளது.
கேப்டன் டோணி தலைமையில் இந்தியா உலகக் கோப்பையில் ஒரு முறை ஆஸ்திரேலியாவுடன் மோதியுள்ளது. அந்தப் போட்டியில் இந்தியாவே வெனன்றது.
கடந்த உலகக் கோப்பைத் தொடரில்தான் டோணி தலைமையிலான இளம் படையுடன் ஆஸ்திரேலியா மோதியது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ரிக்கி பான்டிங். அனுபவம் வாய்ந்த ரிக்கி தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் புரட்டிப் போட்டு வென்றது இந்தியா.

அகமதாபாத்தில் நடந்த இந்தப் போட்டி காலிறுதிப் போட்டியாகும்.
இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 47.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்களை மட்டும் இழந்து 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆக, கேப்டன் டோணி தலைமையிலா இந்திய அணி, உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதில்லை என்ற வகையில் சாதகமான மனோ நிலையில் வருகிற அரை இறுதிப் போட்டியை இந்தியா தைரியமாக சந்திக்கலாம்.


Click it and Unblock the Notifications