Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓய்வை பத்தி முதல்ல தோனி பேசட்டும்... அப்புறம் நாம பேசலாம்..! முன்னாள் வீரர் ‘நச்’ கருத்து

Recommended Video

ஓய்வை பத்தி முதல்ல தோனி பேசட்டும்... அப்புறம் நாம பேசலாம் - பத்ரிநாத்

கோவை: தோனியின் ஓய்வு குறித்து யாரும் பேசக்கூடாது என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.

இந்தியாவை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகளை பற்றி தெரியாத கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது. உலகின் பல நாடுகளில் உள்ள முன்னணி வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி இருக்கின்றன.

பெரும் வரவேற்றை பெற்றிருக்கும் தொடர் ஐபிஎல். அது போன்றே, தமிழகத்தில் டிஎன்பில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

டிஎன்பிஎல் போட்டிகள்

டிஎன்பிஎல் போட்டிகள்

தமிழகத்தில் தற்போது டிஎன்பிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கோவை சென்றார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறியிருப்பதாவது:

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்தும் உலக கோப்பையில், நியூசிலாந்திடம் அரையிறுதியில் தோற்று வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தோல்விக்கு காரணம் மிடில் ஆர்டர் வரிசையில் சரியான நபர் இல்லாதது தான் என்று நினைக்கிறேன்.

எதுவும் பேசக்கூடாது

எதுவும் பேசக்கூடாது

மேலும் உலக கோப்பை தொடர் முடிந்து தோனியின் ஓய்வு குறித்து அதிகம் எல்லாரும் பேசி வருகிறார்கள். அவரது ஓய்வு குறித்து தலைமையும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு நிலை இருக்கும் போது, தோனியின் ஓய்வு குறித்து யாரும், எதுவும் பேசக்கூடாது.

தோனிக்கு உரிமை

தோனிக்கு உரிமை

ஓய்வு பற்றியும், அது எப்போது என்பது பற்றியும் முடிவு எடுக்கும் உரிமை தோனிக்கு மட்டுமே இருக்கிறது. இந்திய அணிக்காக பல போட்டிகளையும், கோப்பைகளையும் ஜெயித்து கொடுத்தவர்.

சிறந்த கேப்டன் கோலி

சிறந்த கேப்டன் கோலி

ஆகையால், அவரின் ஓய்வு முடிவை அவரே எடுக்கட்டும். அதேசமயம் விக்கெட் கீப்பராக பன்ட்டை தேர்வு செய்தது வரவேற்கத்தக்கது. மேலும் இப்போது கேப்டன் மாற்றம் இந்திய அணிக்கு தேவை இல்லை . ஒரு கேப்டனாக கோலி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் என்றார்.

Story first published: Monday, July 22, 2019, 21:23 [IST]
Other articles published on Jul 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+