Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீம்ல சின்ன சின்னதா வேலைகள் செய்யணும்... சிஎஸ்கே சூப்பரா ஆயிடும்

துபாய் : சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி அந்த அணியின் சில பல விஷயங்களை சரி செய்வதன்மூலம் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.

அணியை முன்னின்று தோனி வழிநடத்தி அதன்மூலம் வெற்றிக்கான வழிகளை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

அணியின் ஒவ்வொரு வீரரும் டி20 போட்டிகளை வெற்றி கொள்வதற்கான திறமைகளை தனிப்பட்ட முறையில் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஞ்ச்ரேகர் அறிவுறுத்தல்

மஞ்ச்ரேகர் அறிவுறுத்தல்

ஐபிஎல் போட்டிகளில் வழக்கமாக சிறப்பாக விளையாடும் சிஎஸ்கே அணி, லீக் போட்டிகளில் எப்போதாவது தான் நெருக்கடியை சந்திக்கும். அந்த வகையில் தற்போது நெருக்கடிகளை சந்தித்து வருவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.

தோனி மீது ரசிகர்கள் நம்பிக்கை

தோனி மீது ரசிகர்கள் நம்பிக்கை

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியாவின் பக்கத்தில் இந்த ஆட்டத்தின் நிறைகுறைகள் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேகர் பேசியுள்ளார். சிஎஸ்கே ரசிகர்கள், அணியில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கேப்டன் தோனி தீர்த்து வைப்பார் என்று நம்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தோனி தலைமை

தோனி தலைமை

அணியின் ஒவ்வொரு வீரரும் டி20 போட்டிகளை ஆடி வெல்லும் திறமைகளை கொண்டுள்ளதாகவும் ஆனால் இதை செயல்படுத்துவதற்கு கேப்டன் தோனியின் தலைமை முக்கியம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஐபிஎல்லில் இதுவரை ஆடியுள்ள 3 போட்டிகளில் இரண்டில் தோற்றுள்ள சிஎஸ்கே, இன்றைய போட்டியில் போதிய கவனத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது.

மாற்றத்தின் அவசியம்

மாற்றத்தின் அவசியம்

அணியில் சிலபல திருத்தங்களை தோனி செய்ய வேண்டியுள்ளது குறித்தும் சஞ்சய் மஞ்ச்ரேகர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பௌலிங்கில் அவர் மாற்றங்களை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்க்கு பதிலாக இன்றைய போட்டியில் அம்பத்தி ராயுடு இடம்பெறும் வாய்ப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

பௌலரின் அவசியம்

பௌலரின் அவசியம்

ருதுராஜ் கெய்க்வாட் போன்ற குழந்தை வீரர் மிடில் ஆர்டரில் விளையாடுவதை காட்டிலும் அவருக்கு பதிலாக அணிக்கு ஒரு பௌலரை கொண்டு வரலாம் என்றும் மஞ்ச்ரேகர் அறிவுறுத்தியுள்ளார். கெய்க்வாட்டிற்கு மிடில் ஆர்டரில் விளையாடுவது மிகவும் கடினமான செயல் என்றும் மஞ்ச்ரேகர் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, October 2, 2020, 20:52 [IST]
Other articles published on Oct 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+