Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி... நீங்களே ஓய்வை அறிவித்துவிடுங்கள்..! இல்லையெனில்... ஸ்கெட்ச் போடும் பிசிசிஐ..!!

Recommended Video

இப்போது ஒய்வு வேண்டாம்... ட்விட்டரில் கோரிக்கை வைக்கும் தோனி ரசிகர்கள்

மும்பை: தல தோனி ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டாலும், இனி அணியில் அவர் நீடிப்பது கடினமே என்று பிசிசிஐ தேர்வுக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரசிகர்களால் கேப்டன் கூல், தல என அழைக்கப்படும் தோனி இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். கபில் தேவுக்கு பிறகு உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்திருக்கிறார்

நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும், அதே உற்சாகத்தில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்றும் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

திருப்புமுறை விக்.

திருப்புமுறை விக்.

அந்த போட்டியில் தோனியின் ரன் அவுட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து தோனி தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற சர்ச்சை மீண்டும் எழுந்தது. முன்னாள் வீரர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், தோனி அது குறித்து எதுவும் மனம் திறக்கவில்லை.

நெருக்கடி தரும் பிசிசிஐ

நெருக்கடி தரும் பிசிசிஐ

இதற்கிடையே 2020ல் நடக்க இருக்கும் உலகக் கோப்பை டி20 தொடர் வரை தோனி விளையாடுவர் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவருக்கு பிசிசிஐ தற்போதே நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

அதாவது, இங்கிலாந்துடனான லீக் போட்டியில் ரன் சேசிங்கில் தோனி மந்தமாக ஆடியதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இனியும் தோனி ஓய்வு முடிவை அறிவிக்காத நிலையில், தேர்வு முறையில் அதிரடி மாற்றங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நீக்கப்படும் வாய்ப்பு

நீக்கப்படும் வாய்ப்பு

தோனி ஓய்வை அறிவிக்காவிட்டாலும், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் உள்பட அடுத்தடுத்து வரும் தொடர்களில் அணியில் தோனிக்கான நிரந்தர வாய்ப்பை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண வீரர்களுக்கு நடத்தப்படுவது போன்று ஆட்டத்திறன் அடிப்படை யிலேயே தோனியும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

ஓய்வு பெறுவது நல்லது

ஓய்வு பெறுவது நல்லது

தோனி இந்திய அணிக்காக எந்த சாதனையும் செய்வதற்கு இல்லை. எனவே, அவர் ஓய்வு பெறுவது நல்லது. அவரால் ரிஷப் பன்ட் போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, விரைவில் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தோனியிடம் இது குறித்து பேசுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Monday, July 15, 2019, 14:45 [IST]
Other articles published on Jul 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+